GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஆசிரியர் வேலை.....பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி தர்மபுரி. பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர்களுக்கான நேரடி நேர்காணல்

பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா தர்மபுரி 
பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர்களுக்கு நேரடி நேர்காணல் 22.3.2025 சனிக்கிழமை நடைபெறுகிறது. முதுகலை பட்டதாரிகள்(post graduate teachers English Hindi mathematics physics chemistry biology history geography economics and computer science) இளநிலை பட்டதாரிகள்(trend graduate teachers English Hindi Sanskrit mathematics social studies and science) தொடக்கப்பள்ளி (primary teachers and Balvatika teachers grade 3) ஆசிரியர்கள்,கணினி பயிற்சியாளர்கள்(computer instructor), யோகா பயிற்சியாளர்கள்(yoga instructor),நடன ஆசிரியர்கள்(dance teacher), தமிழ் ஆசிரியர்கள்(Tamil teacher), ஆலோசகர்கள்(counsellors) சிறப்பு ஆசிரியர்கள்(special educator), விளையாட்டு பயிற்சியாளர்கள்(sports coach) and nurse பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

நேர்காணல் நேரம்: 22.3.2025 
 காலை 8:30 முதல் 9 30 வரை 
குறிப்பு:9.30 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதி இல்லை மேலும் தகவல்களுக்கு https://dharmapuri.kvs.ac.in
இணையதளத்தை காணவும் 
நேர்காணலுக்கு வருபவர்கள் உரிய  சுய சான்றோபமிட்ட நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வரவும்.

சனி, 8 மார்ச், 2025

பெண்ணே நீயும் பெண்ணா?பன்னாட்டு மகளிர் தினம்...

மகளிர் தினம் 
       08.03.2025
உலகை படைக்கும்
உயர்வை பெற்றவள்

மழலைகள் படைக்கும்
மகத்துவம் பெற்றவள்

விதைகள் படைத்து
வியனுலகம் காப்பவள்

அன்பை படைத்து
அகிலம் காப்பவள்

தொப்புள் கொடியில்
தொடர்பை தருபவள்

மார்பில் சுமந்து
மக்களை வளர்ப்பவள் 

வலிகளை தாங்கி 
வாழ்க்கையை தருபவள்

காதலை கொடுத்து 
காவியம் படைப்பவள்

நேசத்தில் நிறைந்து
நெஞ்சினில் இருப்பவள்

பூக்களாய் மலர்ந்து 
புவிதனில் சிறப்பவள்

தாலாட்டுப் பாடி தரணியை வளர்ப்பவள்

புயலென கிளம்பி
புரட்சிகள் செய்பவள்

புன்னகை வீசி 
புதுவசந்தம் தருபவள்

தாவரங்கள் போல 
தாய்வரம் பெற்றவள்

படிக்கற்கள் போல 
மிதிகள் பெறுபவள் 

படித்து வளர்ந்து
பாதைகள் அமைப்பவள்

பெண்ணாய் பிறந்து
பொன்னாய் ஒளிர்பவள்

பெண்ணியம் போற்றி பெருமைகள் செய்வோம்
- இரா. முருகன்

பட்டதாரி ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேவண்ண கவுண்டனூர் சங்ககிரி ஒன்றியம் சேலம் மாவட்டம்

திங்கள், 3 மார்ச், 2025

+2 தேர் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு.... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஒருமுறை படித்துச் சொல்லுங்கள்

*பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் புலனக் குழுக்களில் பகிர....*

12th Std - 11th - 10th Std 
👉

👉பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்:

*Examக்கு எடுத்து செல்ல வேண்டியவைகள்*:

1) Hall Ticket ( 2 copies)
2) Blue Pen -2
( Ball Point / Ink / Gel )
3) Long Size Scale / Pencil / Sharpner /  ink & pencil Eraser / 
For Maths: Geometry Box & Pro-circle

*தேர்வு நடைபெறும் நேரம்*
: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )

Rules:
1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9:30 மணிக்குள்) முன்பே சென்றுவிடவேண்டும்.

2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

3) Blue  பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.

 4).Blue Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது. 

5) Uniformல்தான் Examக்கு போக வேண்டும்.

6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.

7). சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.

8) *10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது*. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும். 

*விடை எழுத வேண்டிய முறைகள்*:
1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய 
Exam Roll No / Name / 
Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

2) விடையை எழுதுவதற்கு முன் பாடத்தின் பெயரை மேலே தெளிவாக எழுத வேண்டும்.

3)100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 100/100உம் விடைகளை எழுத வேண்டும்.

4) Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுத வேண்டும்.

5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.

6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.

7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.

8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது. 

9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.

10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். Question Numberஐ எழுதாமல் விட்டால் Answerஐத் திருத்த மாட்டார்கள்.

11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.

12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.

13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.

14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.

16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.

17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.

18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.

19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.

20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.

21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.

22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d)  (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதினால் அது தவறு ஆகும்.

23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதக்கூடாது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதக்கூடாது. 
Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத வேண்டும்.

24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.

General Advice: 👇👇👇👇
Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது / 
பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது போன்று தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும். 
👇👇👇👇

தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும்.

*அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!*
👍👍👍

நீட் தேர்வு 2025 விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் முக்கிய தினங்கள்

 NEET EXAM  2025: IMPORTANT DATES


Event                                                                Date & Time

Registration Period         : February 7 - March 7, 2025 (until 11:50 PM)

Fee Payment Deadline        :  March 7, 2025 (until 11:50 PM)

Correction Window            :  March 9 - March 11, 2025

Exam City Intimation        :  April 26, 2025

Admit Card Release           :  May 1, 2025

Exam Date                          :   May 4, 2025 (2:00 PM - 5:00 PM IST)

Result Date                          :  June 14, 2025 (Tentative)

NEET UG 2025: Application Fee

General Category: ₹1,700

 General-EWS/OBC-NCL: ₹1,600

 SC/ST/PwBD/Third Gender: ₹1,000 (for exams held in India)

 Outside India Candidates: ₹9,500

 How to Apply for NEET UG 2025?

Step 1: Visit neet.nta.nic.in.

 Step 2: Click on “Registration for NEET(UG)-2025 is LIVE!”.

 Step 3: Enter your details to generate login credentials.

 Step 4: Log in and complete the application with personal details, educational qualifications, and exam center preferences.

 Step 5: Pay the exam fee and submit the form.

 Step 6: Download the confirmation page.

 Post-Registration Updates

Correction Window: March 9-March 11, 2025.

 Exam City Intimation Slip: April 26, 2025.

 Admit Card Release: May 1, 2025.

 மேலும் புதிய தகவல்களுக்கு  மாணவர்கள் neet.nta.nic.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பின்தொடர வேண்டும் மற்றும் கடைசி நேர தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.


வியாழன், 27 பிப்ரவரி, 2025

குடிமக்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அல்லது பிறப்புச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் திருத்தம் செய்ய கடைசி தேதி

 1. பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மற்றும் மாற்றத்திற்கான கடைசி தேதி


குடிமக்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க அல்லது பிறப்புச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் திருத்தம் செய்ய இந்திய அரசு ஏப்ரல் 27, 2026 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இது தவிர, பிறப்புச் சான்றிதழில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால், காலக்கெடுவிற்கு முன்பே மாற்றங்களைச் செய்ய முடியும். ஏப்ரல் 27, 2026 க்குப் பிறகு, மேலும் எந்த மாற்றங்களும் திருத்தங்களும் அனுமதிக்கப்படாது.


2. பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்திற்கான விதிகளில் மாற்றம்


முன்னர், பிறப்புச் சான்றிதழ்கள் பிறந்த 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இருப்பினும், அரசாங்கம் இப்போது இந்த விதியை நீட்டித்துள்ளது. இப்போது, ​​15 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களும் தங்கள் பிறப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம், இது முன்பு சாத்தியமில்லை. இதற்கான கடைசி தேதி முதலில் டிசம்பர் 31, 2024 என நிர்ணயிக்கப்பட்டது.


3. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி


புதிய விண்ணப்பங்களுக்கு: உங்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dc.crsorgi.gov.in/crs ஐப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CLICK HERETO APPLY BIRTH CERTIFICATE CLICK HERE

திங்கள், 10 பிப்ரவரி, 2025

இந்த நாள் இனிய நாளாக* அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
     
*இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்* 

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐