GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 6 மே, 2024

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பொறியியல் (என்ஜினீயரிங்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2024-2025 அறிவிப்பு


தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பொறியியல் (என்ஜினீயரிங்) சேர்க்கை 2024 
முதலாம் ஆண்டு பிஇ /பிடெக்/ பி ஆர்க் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/ அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Engineering admission 1 CLICK HERE




இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA FACILITATION CENTRE அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப கட்டணம் ரூபாய் OC/BC/BCM/MBC/&DNC500 ரூபாய் 
SC/SCA/ST 250 பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங்/யுபிஐ இணையதள வாயிலாக செலுத்தலாம்.

 இணையதள வாயிலாக பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் 
 The secretary,  TNEA PAYABLE  AT CHENNAI என்ற பெயரில் 6. 5. 2024 அன்றிலிருந்து பெற்ற வரைவொலையை பயன்படுத்தி கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA FACILITATION CENTRE வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம் 

கலந்தாய்வு விவரங்கள் வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம் 

விண்ணப்பம் பதிவு செய்ய ஆரம்ப நாள் 06.05. 2024 இறுதி நாள் 06.06.2024 மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும் 


மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த குறிப்பிட்ட மாணவரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்

 குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது 

விளையாட்டு வீரர்களுக்கான அசல சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும் 

அனைத்து வகையான கலந்தாய்வுகளும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும் 

பகுதி நேர பட்டப்படிப்புகள் செயற்கைக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்

ஞாயிறு, 5 மே, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

                 பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது மாணவர்கள் கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்


சனி, 4 மே, 2024

பிளஸ் டூ மாணவர்களின் கவனத்திற்கு....நீங்கள் வழக்கறிஞர் ஆக வேண்டுமா இதோ....சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


ஐந்தாண்டு சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.

வரும் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்... தேர்வு முடிவுகளை மாணவர்கள் எங்கெல்லாம் தெரிந்து கொள்ளலாம்?

 பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாகிறது.

 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவர்களின் செல்போன் எண் களுக்கு உடனடியாக மதிப்பெண்கள் உடன் கூடிய முடிவுகள் தெரிவிக்கப்படும். இது தவிர மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி தேர்வர்கள் தாங்கள் தேர் எழுதிய தேர்வு மையங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இது தவிர அரசு தேர்வுகள் துறையின்   https://tnresults.nic.in    https://www.dge.tn.gov.in  இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
 மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் இயல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

TN HSC +2 முடிவுகள்  கீழ்கண்ட அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும். 

+ results link 1

+2 results link 2 

+2 results link 3

+2 result link 4


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வு எழுத வருகை தராத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் துணை தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன 
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் 'தொடர்ந்து கற்போம்' என்னும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

 பொது தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 3 மே, 2024

18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து

*கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.*

பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில் TNPSC குளறுபடி.

4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, மாற்றியமைப்பட்ட
பட்டியலை வெளியிட உத்தரவு.

என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்: நாளை மறுதினம்

 +2 தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் என்ஜினீயரிங்  படிப்புகளுக்கான  ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளதாக என்ஜினியரிங் சேர்க்கை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும், ஜூலை 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது.