தமிழகத்தில் இருந்து இம்முறை 1.4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துகிறது. இம்முறை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்வு மையத்துக்கு மாணவர்கள் அரைமணி நேரத்துக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை கொண்டு வருவது அவசியம். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த அதே புகைப்படத்தை எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட், ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் ஆவணத்தை எடுத்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக் கூடத்தில் உதவியாளர்களை அழைத்து வரத் தகுதியுள்ள சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய அனுமதி சான்றுகளைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அரைக்கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்படும். பெண்கள் நகைகளை அணிந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளன.
ஒடிஸாவில் ஒத்திவைப்பு:"பானி' புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
ஞாயிறு, 5 மே, 2019
எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
அரசு பள்ளிகளில், ஜூன், 3 முதல்ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு, கட்டாயமாக அமலுக்கு வருகிறது.
பயோமெட்ரிக்' பதிவு ஆசிரியர்களுக்கு கட்டாயம்
தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசின் சார்பில், சம்பளம்தரப்படுகிறது. ஆனால், அரசின் செலவுக்குஏற்ற வகையில், தேர்ச்சி விகிதம் இல்லை என, கணிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆசிரியர்களின் வருகை மற்றும் அவர்களின் பணி நேரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிகளுக்குதாமதமாக வருவதை தவிர்க்கும் வகையில், பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமலுக்கு வர உள்ளது.ஜூன், 3ல், பள்ளிகள் திறக்கப்படும்நிலையில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவை நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான கருவிகள் அமைக்கும் பணி, பள்ளிகளில்நடந்து வருகிறது.
விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைக்கு, ஜூன், 21 வரை அவகாசம் உள்ளது.
கட்டடங்கள் வரன்முறை ஜூன், 21 வரை அவகாசம்
தமிழகத்தில், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்காக, நகர், ஊரமைப்பு சட்டத்தில், '113 - சி' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை செய்யப்படும். இந்த வரன்முறை, திட்டம், 2017 ஜூன், 22ல் அமலுக்கு வந்தது.ஆறு மாதங்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பின், அடுத்தடுத்து, இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, வரன்முறைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 21ல் முடிகிறது. இதுகுறித்து, நகர், ஊரமைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைக்கு, விண்ணப்பம் பெறுவதற்கான அவகாசம், ஜூன், 21ல் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே, நான்கு முறை நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
எனினும், இத்திட்டத்தில், இதுவரை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே, விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நடப்பு கல்வியாண்டில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, டிப்ளமா படிப்பு, சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மே, 17 வரை, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.விண்ணப்பம் விலை, 150 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., இனத்தவருக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 17க்குள் ஒப்படைக்க வேண்டும்
சனி, 4 மே, 2019
தகுதி தேர்வில், 'பெயில்' :ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவக்கம்
சென்னை:அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியில் சேரும் ஆசிரியர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், 2010 ஆகஸ்ட், 23ல் அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, 2010 ஆகஸ்டுக்கு பின், பணியில் சேர்ந்த, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதி தேர்ச்சி பெற கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச், 31ல், அவகாசம் முடிகிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில், நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டதாகவும், அதில், ஏராளமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், தமிழக அரசு பட்டியல் தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்; அவர்களின், மார்ச் மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, 1,500 ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்புமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஆசிரியர்களின் விளக்கத்துக்கு ஏற்ப, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இடஒதுக்கீட்டுக்கு உத்தரவு
சென்னை:'பிளஸ் 1 வகுப்புக்கான, மாணவர் சேர்க்கையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 படிப்பில் சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும், பல தனியார் பள்ளிகளில், மூன்று மாதங்களுக்கு முன், பிளஸ் 1க்கான சேர்க்கை, முடிக்கப்பட்டு விட்டது. தற்போது, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகள் மட்டுமே, ஒதுக்கப்படுகின்றன.
மற்ற மாவட்டங்களில், விதிகளை பின்பற்றி, பிளஸ் 1க்கு விண்ணப்பம் பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த சேர்க்கையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, மாணவர்களை சேர்க்கும்படி, பள்ளிகளுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 30 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; பட்டியலினத்தவருக்கு, 18 மற்றும் பழங்குடியினருக்கு, 1 சதவீதம் என, இட ஒதுக்கீடு செய்து, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த விதிகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்புக்கான சிறப்பு தேர்வில் பங்கேற்கும் தனி தேர்வர்கள், வரும், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு தேர்வுகள் துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பித்து, பங்கேற்காதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் படித்த பள்ளிகளிலும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளிலும், 'ஆன்லைனில்'விண்ணப்பிக்கலாம். வரும், 6ம் தேதி பிற்பகல் முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.
தனியார் பிரவுசிங் மையங்கள் வழியே விண்ணப்பிக்க முடியாது. தேர்வுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்கும் பள்ளிகளில், ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் தேதி, பின் அறிவிக்கப்படும். ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய முகவரி இடம் பெற்றிருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை, 'நீட்' தேர்வு: 15 லட்சம் பேர் பங்கேற்பு
நாடு முழுவதும், 'நீட்' நுழைவு தேர்வு நாளை நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நாளை நடக்கிறது. நாடு முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுத உள்ளனர்; அவர்களுக்காக, 2,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 1.40 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத, 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு, மதியம், 2:00 மணிக்கு துவங்கி, 5:00 மணிக்கு முடிகிறது. தேர்வில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆடைகள், ஆபரணங்களுக்கும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய, கலாசார மற்றும் மத ரீதியான உடை உடுத்தும் மாணவர்கள், கூடுதல் சோதனைகளுக்காக, மதியம், 12:30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' மற்றும் புகைப்படம், கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். தேர்வு மையத்துக்குள், தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி கிடையாது. மாணவியரை சோதிக்க, பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, கண்காணிப்பு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தயார் செய்ய வேண்டியது!
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முகவரிகள், ஹால் டிக்கெட்டில் தரப்பட்டுள்ளன. முகவரி அறிவதில் சிரமம் தவிர்க்க, தேர்வு மையங்களை இன்றே பார்த்து வைப்பது நல்லது. அதேபோல, நீண்ட துாரம் பயணம் செல்வதாக இருந்தால், இன்றே சென்று விடுவது நல்லது.ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட பின், சில மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்றியுள்ளதாக, என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.புகைப்படம்தேர்வு மையத்தின் பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்றவற்றை, ஹால் டிக்கெட்டிலும், என்.டி.ஏ., இணையதளத்திலும், ஒரு முறை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, வழங்கப்பட்ட புகைப்படத்தை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒரு புகைப்படம் தேவைப்படும் நிலையில், கூடுதலாக ஒன்றோ, இரண்டோ புகைப்படம் வைத்திருப்பது நல்லது.ஹால் டிக்கெட்டின் நகலை, கூடுதலாக பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடை பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க, கையில், ஒரு சாதாரண ஆடை வைத்திருந்தால் உதவியாக இருக்கும்.தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன், சரி விகிதத்தில் உணவு சாப்பிட்டு கொள்ள வேண்டும். உடல் உபாதை தராத வகையில், எளிதான உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது. தேர்வு மையத்திற்குள், 11:30 மணியில் இருந்து, மாலை, 5:30 மணி வரை, ஆறு மணி நேரம் வரை இருக்க வேண்டும். அதற்கேற்ற சக்தி கிடைக்கும் உணவு அல்லது பழச்சாறு உட்கொண்டிருக்க வேண்டும். மையத்துக்கு செல்லும் முன், அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். வருமான வரித்துறையின், 'பான்' கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ரேஷன் அட்டை, 'ஆதார்' அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்று, கட்டாயம் வேண்டும் என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.இந்த ஆவணங்களில், ஒன்றுக்கு மேல் இருந்தால், அதை மாற்று உபயோகம் கருதி, பெற்றோர் எடுத்து வைத்து கொள்வது நல்லது.தேர்வு மையம்; திடீர் மாற்றம்நாளை நடக்கவுள்ள, 'நீட்' நுழைவு தேர்விற்கு, தமிழகத்தில், 200 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், மதுரையில், 35 மையங்களில், 6,853 மாணவர்கள், 11 ஆயிரத்து, 147 மாணவியர் என, மொத்தம், 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மதுரை மண்டலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும், தேர்வு மையங்களில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சில மையங்கள் ரத்து செய்யப்பட்டு, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளன. மையங்கள் மாற்றப்பட்ட மாணவர்களின் பதிவு எண்கள், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,வின், www.ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புதிய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான அறிவிப்பை, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹம்சபிரியா தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 3 மே, 2019
சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 தேர்வில், சென்னை மாணவர், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.
மே மாதம், இரண்டாவது வாரத்தில், முடிவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவால், நேற்று திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், உ.பி.,யை சேர்ந்த இரு மாணவியர், 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, நாட்டிலேயே முதல் இடம் பிடித்தனர். உத்தரகண்ட், உ.பி., மற்றும் ஹரியானாவை சேர்ந்த மூன்று பேர், 498 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம் பெற்றனர். 497 மதிப்பெண்கள் எடுத்து, 18 பேர், மூன்றாம் இடம் பிடித்தனர்.
மூன்றாம் இடம் பெற்றதில், சென்னையை சேர்ந்த மாணவன் கார்த்திக் பாலாஜியும் ஒருவர். இவர், கே.கே.நகர் பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்துள்ளார். அவருக்கு, உடன் படித்தவர்களும், உறவினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றது குறித்து, கார்த்திக் பாலாஜி கூறியதாவது:
பாடங்களை விரும்பி படித்தது தான், அதிக மதிப்பெண் பெற முக்கிய காரணம். தினமும் நான்கு முதல், ஐந்து மணி நேரம் பாடங்களை படிப்பேன். அப்போது, வேறு எதிலும் கவனத்தை சிதற விடாமல், 'ரிலாக்சாக' படிப்பேன்.மற்ற நேரங்களில், 'டிவி' பார்ப்பது, விளையாடுவது என, பொழுதை கழிப்பேன். படிப்பதில் எந்த அழுத்தமும் இன்றி, நமக்காக படிக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால், மதிப்பெண் எடுப்பதோ, தேர்வு எழுதுவதோ எளிதான விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, நேற்று விண்ணப்பப் பதிவு துவங்கியது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு துவக்கம்
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள், தமிழகத்தில் செயல்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்லுாரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வி துறை, இந்த ஆண்டு நடத்துகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நேற்று துவங்கியது.
தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான,www.tneaonline.inஎன்ற இணைய தளத்தில், மாணவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தோ, 'பிரவுசிங்' மையங்கள் வாயிலாகவோ அல்லது பயிற்சி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு உதவுவதற்கு, மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் முகவரிகள் தெரியாமல், மாணவர்களும் பெற்றோரும் தவித்தனர். இணையதளத்திலும் அடிப்படை தகவல்கள் இடம் பெறவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தகவல்களையும், உதவி மைய முகவரிகளையும், இணையதளத்தில் உயர் கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
கவுன்சிலிங் தொடர்புக்குஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் வழி முறைகள், கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பிக்கும் முறை, சான்றிதழ் விபரங்கள் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால், மாணவர்களும், பெற்றோரும், தமிழக உயர்கல்வி துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தை போனிலும், நேரிலும் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கிண்டி சர்தார் படேல் சாலையில், காந்தி மண்டபம் எதிரில், அண்ணா பல்கலை அருகில் உள்ளது. தமிழக உயர்கல்வி துறையின் அலுவலகம், ராஜாஜி சாலையில் உள்ள, தலைமை செயலக வளாகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ளது.இதுதவிர, உதவி மையங்களின் முகவரிகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கவுன்சிலிங் குறித்த சந்தேகம் உள்ளவர்கள், உயர்கல்வி அலுவலகம், 044 - 2567 0499, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னைக்கான, 044 என்ற கோடுடன், 2235 0525, 2235 1018, 2235 0618, 2235 1423, 2235 1014, 2235 1015 என்ற தொலைபேசி எண்களிலும் பேசி, விளக்கம் பெறலாம்.மேலும்,tnea2019enquiry gmail.comமற்றும்,hrsectn.gov.inஆகிய, இ -மெயில் முகவரியிலும் தகவல் அளித்து, விளக்கம் பெறலாம்.
மாவட்ட வாரியாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதன் முகவரிகளையும், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அலுவலகத்தில் கேட்டு பெறலாம் அல்லது www.tndte.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வரும் நாட்களில் கட்டணமில்லா தொலைபேசி உதவி மையமும் அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும், 8ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, 2019 -20ம் கல்வியாண்டில், 10 பட்டப்படிப்புகளை, 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லுாரிகள் மூலம் வழங்குகிறது. கடந்தாண்டு முதல் வேளாண் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேளாண் பல்கலையின்,www.tnau.ac.in/admission.htmlஇணையதளத்தில், வரும், 8ம் தேதி முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்யலாம். ஜூன் 7ம் தேதி பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவு செய்த பின், விண்ணப்ப கட்டணத்தை இணையதள வங்கி அல்லது டெபிட், கிரெடிட் கார்டு வழியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய, ஜூன், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 11 முதல், 13 வரை நடைபெறும். தரவரிசை பட்டியல், ஜூன் 20ல் வெளியிடப்படும். இளங்கலை சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு, 0422 - 6611345 / 6611346 ஆகிய எண்களில் காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலம்
மாணவர்கள் புகைப்படத்துடன் 'ஆன்லைன் 'டிசி': இந்த ஆண்டு முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு
மே 03,2019இந்த ஆண்டு முதல் மாணவர்கள் புகைப்படத்துடன்' ஆன்லைன்' மாற்றுச் சான்றிதழ் ('டிசி') வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்கள் குறித்து 'எமிஸ்' மூலம் முழுவிபரம், ஆதார் எண்ணுடன் கல்வித்துறை 'சர்வரில்' பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு வரை கையால் எழுதி 'டிசி' தலைமையாசிரியர் கையெழுத்துடன் வழங்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளுக்கும் டிஜிட்டல் மயமாக ஆன்லைன் 'டிசி' வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாரியாக 11 எண் கொண்ட 'யூடிஎஸ்' எண் கல்வித்துறை வழங்கியுள்ளது. கம்ப்யூட்டரில் அதனை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளி சர்வரில் மாணவர்களை பற்றிய விபரங்கள் இருக்கும்.
மாணவரின் 'எமிஸ்' எண்ணை டைப் செய்தால் அதில் அவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, மதம், பெற்றோர் பெயர், பள்ளியில் சேர்ந்த தேதி, கடந்த ஆண்டு படித்த வகுப்பு, தேர்ச்சி பெற்ற வகுப்பு போன்றவை தெரியவரும். மாணவரின் மச்ச அடையாளங்களை பதிவு செய்து தலைமையாசிரியரின் டிஜிட்டல் கையெழுத்துடன் பிரின்ட் எடுக்கலாம்.
இரு நகல்கள் மாணவர்கள் புகைப்படத்துடன் கிடைக்கும். அதில் ஒன்று மாணவர்களுக்கும், மற்றொன்று பள்ளி ஆவணமாகவும் பராமரிக்கப்படும்.
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதி சென்னை, ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த முதன்மை விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளாக உருவாகலாம். இதற்கென பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு மே 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு விடுதியில் தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் ஆகிய பயிற்சியும், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் 2019--20ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.