GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 2 ஜனவரி, 2019

ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது.

ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தத் தடையை, அரசு விடாப்பிடியாக அமல்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும், மாசை தவிர்க்கும் முயற்சியில், அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில், உணவகங்களில், 'பார்சல்' வழங்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, 12 பாரம்பரிய பொருட்களை, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு அறிவித்தபடி, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், 'பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும்' என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த எதிர்ப்பை மீறி, அரசு தடையை அமல்படுத்தியது. இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு தவிர்க்கும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது.

'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்'

'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 - 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.பள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு 'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது

இந்தாண்டு
'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறதுஅண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும்.குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றனகிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும்.தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'தெர்மாக்கோல்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

.தமிழகம் முழுவதும் நேற்று முதல், பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலித்தீன், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உட்பட, மொத்தம், 14 வகை பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என, உள்ளாட்சி அமைப்புகள் வழியாககண்காணிக்கப்படுகிறது.இந்த தடைப்படி, எளிதில் மக்காத தெர்மக்கோல் அட்டைகளையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகளில், பாடங்களின் செய்முறை பயிற்சிகளுக்கு, தெர்மாக்கோல் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆர்கிடெக்ட் படிக்கும் மாணவர்களுக்கு, தெர்மாக்கோல் அதிகம் பயன்படுகிறது.தற்போது தடை சட்டம் அமலாகியுள்ளதால், வரும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளின் செய்முறை திட்டங்களுக்கு, கனத்த காகிதம், தடிமனான அட்டைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பள்ளிகளின் செய்முறை பயிற்சிகளுக்கு மட்டும், தெர்மாக்கோல் பயன்பாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தெளிவான வழிகாட்டுதல் தேவை என, கல்வி நிறுவனங்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.அதேநேரம், தெர்மாக்கோலுக்கு விலக்கு அளித்தால், அந்த சலுகையை, அலங்கார பொருட்களுக்கான வணிக பயன்பாட்டுக்கு, தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய், 1 ஜனவரி, 2019

குரூப் - -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

குரூப் - -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

குரூப்- - 1 பதவிகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி துறை உதவி கமிஷனர் உட்பட, 85 பணியிடங்களுக்கு, அக்., 13 முதல், 15 வரை பிரதான தேர்வு நடந்தது. இதில், 4,199 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வும், ஜன., 21 முதல், 25 வரை, தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், திருவாரூர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மறைவால், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாகின. 'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், மேலும், 18 தொகுதிகளும் காலியாகி உள்ளன.

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் கிருஷ்ணன், 60, நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர், இப்பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார். பேராசிரியர் பணியில், நீண்டகால அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலையில், 27 ஆண்டுகள் பணியாற்றி, 2016, டிச., முதல், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மதுரை காமராஜ் பல்கலை இருக்கும், நாகமலை புதுக்கோட்டையை சொந்த ஊராக கொண்டவர். பல்வேறு வெளிநாட்டு பல்கலைகளில், கவுரவவிரிவுரையாளராக பணியாற்றி உள்ளார். மூலக்கூறு உயிரியல்தொடர்பாக, 128 ஆராய்ச்சி கட்டுரைகள், இரண்டு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு குறித்த போட்டியில், வெற்றி பெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி பரிசுகள் வழங்க உள்ளார்.


மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வு போட்டிகள், சென்னையில் நடக்க உள்ளன.சுவரொட்டி வரைதல், சுவர் சித்திரம் வரைதல், டிஜிட்டல் படைப்பாற்றல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன.பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் Fssai.gov.in/creativitychallengeல், ஜன.,3ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும்.மாவட்ட அளவிலான போட்டியில், வெற்றிபெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, ஜன.,27ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பரிசுகள் வழங்க உள்ளார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால், பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல், 22 வரை நடந்தன. இதையடுத்து, டிச., 23 முதல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை, இன்றுடன் முடிகிறது. நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த தும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத் தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நாளை பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி, தாமதமின்றி பாட வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை, 124 தேர்வு மையங்களில், நேற்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள், பொங்கலுக்கு வெளியிட, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது

அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, 'மஞ்சப்பை'க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்படைக்காதவர்களிடம், பறிமுதல் செய்ய, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சனி, 21 ஜூலை, 2018

சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.

சி.ஏ., படிப்புக்கான அடிப்படை, முதன்மை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.'சார்ட்டட் அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., படிப்புக்கான தேர்வுகள், மே மாதம் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகளை, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்டது. இதில், சி.ஏ., இறுதி தேர்வில், பழைய முறை தேர்வு; புதிய முறை தேர்வு என, இரண்டு தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பழைய முறைப்படியான தேர்வில், 9.09 சதவீதம் பேரும், புதிய முறைப்படி நடந்த தேர்வில், 9.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இறுதி தேர்வுகளில், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் மாணவர்கள் முதலிடமும், அகமதாபாத், பெங்களூர் மாணவர்கள், இரண்டாமிடமும், சூரத் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர்.அதேபோல், அடிப்படை தேர்வு மற்றும் பொது திறன் தேர்வான, சி.பி.டி., ஆகியவற்றுக்கும், தேர்வு முடிவு வெளியானது. பொது திறன் தேர்வில், 28.06 சதவீதமும், அடிப்படை தேர்வில், 19.24 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பட்டய கணக்காளர் - சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில்,கோவை, வேடப்பட்டியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், 400க்கு, 288 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 21வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை உள்ளன. முதற்கட்டமாக மலையாளம் தவிர்த்து, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பாட புத்தகங்களை கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உதவியுடன் வெளியிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் நிதியையும் பெற்றுள்ளது. அதனை பயிற்றுவிக்க மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட, தமிழ் தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது.