|
|
திணை: |
|
|
|
|
Asterids |
வரிசை: |
Gentianales |
குடும்பம்: |
|
சிற்றினம்: |
|
துணை சிற்றினம்: |
|
பேரினம்: |
|
இனம்: |
A. scholaris |
Alstonia scholaris |
ஏழிலைப்பாலை, ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை (Alstonia
scholaris) என்பது இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக்
கொண்ட தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா
ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற
மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம்
பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது.
இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris)
என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும்.
விளக்கம்
ஏழிலைப்பாலை 40 மீ உயரம் மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை. இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம். பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
பயன்கள்
இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன. இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது
நன்றி wikipaedia