GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 25 அக்டோபர், 2023

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

 



2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு

 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்- ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.


தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.


 www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

 💐💐💐💐💐💐💐💐💐💐💐

*விஜயதசமி நல்வாழ்த்துக்கள்*

வெற்றி வேட்கை யோடு

வினை வகை யறிந்து

மதி நுட்பம் கொண்டு

செயல் வேகத் திறனுடன்

நல் வழி பாதையில் 

நட்பும் உறவும் வாழ்த்த 

வாகை சூடும் நன்னாள் 


*இரா முருகன் பட்டதாரி ஆசிரியர்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

திங்கள், 23 அக்டோபர், 2023

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

 💐💐💐💐💐💐💐💐💐💐💐

*ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்*


அணுவைப் பிளந்து

ஆற்றலைத் தேடி  

ஆயுதம் ஆக்கும் 

அறிவியல் உலகில்

அகண்ட சிந்தனையோடு

 அன்பெனும் ஆயுதம் 

அகத்தில் எடுத்து

கல்வி கலம் கொண்டு 

பிறவிப் பெருங்கடலை 

நீந்திச் சென்று 

நீடூழி யாவரும் வாழ 

நெஞ்சம் நிறைந்த 

அன்பு வாழ்த்துக்களை 

தெரிவித்துக் கொள்கிறேன்

*இரா முருகன் பட்டதாரி ஆசிரியர்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 11 ஜூன், 2023

நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகை பதிவு மேற்கொள்ளும் முறைகள்

 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும்,  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி


அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,


ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.


Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.


Teacher attendance App இல்  1 முதல்  5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.


மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.


EMIS Team

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்


 

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி