GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 18 ஜூலை, 2018

கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் பல்வேறு கல்வித்திட்டங்கள் செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த திட்டங்களை செயல்படுத்த 117 மாவட்டங்கள் விரும்புவதாக தெரிவித்த அவர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் 70 புதிய மாதிரிக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள 29 கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமபுற பள்ளிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவும், SC/ST மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பள்ளிகளிலும் மின்சார வசதி அவசியம் இருத்தல் வேண்டும் என்பதில் மாநில அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இத்தகு செயல்பாடுகளுக்காக சம்கார சிக்ஷா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்கைகளின் படி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும், அதன்படி மாநில அரசு பின்பற்றுதல் வேண்டும் என்றுமாய் அவர் மாநில அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்

பள்ளிகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 57 ஆயிரத்து 583 பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகின்றன. பெற்றோர் தலைவராகவும், தலைமைஆசிரியர்கள் செயலர்களாகவும் செயல்படுகின்றனர். பள்ளி வளர்ச்சியை மேம்படுத்துதல், மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். அவை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. 

2018--19 கல்வியாண்டு முதல் இதற்கான கட்டணம் மற்றும் இதழ் சந்தா, தொடக்கப் பள்ளிக்கு 160 ல் இருந்து 210 ஆகவும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.210 ல் இருந்து 285, உயர்நிலைப் பள்ளிக்கு 460 ல் இருந்து 860, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.660 ல் இருந்து 1,260ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 57 ஆயிரத்து 583 பள்ளிகளிடம் இருந்து 2.36 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது

செவ்வாய், 17 ஜூலை, 2018

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பல்வேறு அலுவலகங்கள், தாமாக முன்வந்து, அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப் படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,707 இடங்கள் உள்ளன

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை, நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறையை, எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசின் சார்பில், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைக்கப்படும். இவற்றில் பயிற்சி வழங்க, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, விரைவில் துவக்கி வைப்பார்.

புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை

புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பல புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய பாடத்திட்டத்தில் உள்ள, 'பார்கோடு, க்யூ.ஆர்.கோடு, வீடியோ' உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, நவீன முறையில் பாடம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாள் வாழ்த்துக்கள்

எளிமையின் இலக்கணம் இன்று காமராஜர் பிறந்ததினம்

தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, 'கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. கல்விக்கு அவர் ஆற்றிய பணியை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. தொண்டு, துாய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புகளுக்கு மனிதவடிவம் கொடுத்தால், அது காமராஜராகத் தான் இருக்கும்.

கல்வியே முதல் பணி

காமராஜர் 1903 ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று, சிறை சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலரானார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்வானார். 1946--52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார்.

முதல்வர்

கடந்த 1954 ஏப்., 13ல், முதன்முறையாக தமிழக முதல்வரனார். 1963 அக்., 2 வரை, ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவரது ஆட்சியில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள், தமிழகத்தில் தொடங்கப்பட்டன.

பிரதமர் வாய்ப்பு

கட்சியின் மூத்த தலைவர்கள், பதவிகளை இளைஞர்களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, செயல்படுத்த விரும்பினார். அது 'கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் 'காமராஜர்'என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார்.

'பாரத ரத்னா' விருது

காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் மிகச் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

இவரே மக்கள் தலைவர்

காமராஜர் முதல்வராக இருந்த போது, ஒருமுறை மதுரைக்கு வந்தார். விருந்தினர் மாளிகையில் இரவு தங்க ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென மாளிகையில் மின்சாரம் இல்லை. ஊழியர்கள் சரி செய்து கொண்டிருந்தனர். அதைப்பற்றி கவலைப்படாத காமராஜர், "கட்டிலைத் துாக்கி மரத்தடியில் போடு' என்றார். அறையின் உள்ளே இருந்த கட்டிலை மரத்தடிக்கு கொண்டு வந்தனர். அங்கு வந்த காமராஜர், கட்டில் அருகே பாதுகாப்புக்கு நின்று போலீசை பார்த்து, "நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் துாக்கிக் கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய் படு'' என்றார். சில நொடிகளில் துாங்கி விட்டார். இந்த எளிமை உலக வரலாற்றில், எந்த மக்கள் தலைவருக்கும் இருந்ததில்லை.

பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சிகள் நடத்த, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் கூறினார்

பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சிகள் நடத்த, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் கூறினார்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்'

தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி, மாணவ - மாணவியர் இடையே வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஜூலை, 15 முதல், ஆகஸ்ட், 14 வரை, ஒரு மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படும். 

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில், இரண்டு மாதங்களில், இலவச இணைய தள, 'வைபை'

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில், இரண்டு மாதங்களில், இலவச இணைய தள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில், கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசு ஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு 10000 அபராதம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000, 5,000, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கும் நடைமுறை, இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வரும், 31ம் தேதிக்குள், கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறை, கண்டிப்பான ஆணை பிறப்பித்துள்ளது. அதன்பின், தாக்கல் செய்யப்படும் வரி கணக்குகளுக்கு, அபராதம் உண்டு என்றும், இந்த மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை, 2019 மார்ச், 31க்கு பின், தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

வியாழன், 12 ஜூலை, 2018

இஞ்சினியரிங் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்16ம் தேதியும், விளையாட்டு பிரிவினருக்கு, 17ம் தேதியும் நடத்தப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இன்ஜினியரிங் சேர்க்கை ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், சிறப்பு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, இம்மாதம், 6, 7 மற்றும், 8ம் தேதிகளில் நடந்தது.இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, வரும், 16ம் தேதியும், விளையாட்டு பிரிவினருக்கு, 17ம் தேதியும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ளார்