GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 11 மே, 2025

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி மாமல்லபுரம் (தொழில் பயிற்சியுடன் கூடிய நான்காண்டுகள் இளங்கலை பட்டப்படிப்புகள்) மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு

மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு(B.TECH /B.F.A DEGREE IN TRADITIONAL ARCHITECTURE, SCULPTURE,DRAWING AND PAINTING)மாணவ மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை(B.TECH DEGREE IN TRADITIONAL ARCHITECTURE) 

கல்வி தகுதி:பன்னிரண்டாம் வகுப்பு கணிதத்துடன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படத்தில் தேர்ச்சி 

கவின் கலை இளையர் மரபுச் சிற்பக்கலை பட்டம்(BFA DEGREE IN TRADITIONAL SCULPTURE) கல் சிற்பம்/ சுதை சிற்பம்/மரச் சிற்பம் /உலோகச் சிற்பம்
தகுதிகள்:
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது இணையான படிப்பில் தேர்ச்சி 


கவின் கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டம்(BFA DEGREE IN TRADITIONAL DRAWING AND PAINTING)
கல்வி தகுதி
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது இணையான படிப்பில் தேர்ச்சி 

வயது வரம்பு: 1 7 2025 அன்று 

26 வயது நிறைவு செய்யாதவர்கள் 
(ஆதிதிராவிடர் பழங்குடியினர்) 

இதர வகுப்பினர் 23 வயது நிறைவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும். 



விண்ணப்பங்கள் பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 30. 6 .2025 

மேலும் தகவல்களுக்கு

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் -கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் -முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன

பயிற்சி காலம் ஒரு வருடம் 
தகுதிகள் 
கல்வித் தகுதி 
குறைந்தபட்ச கல்வி தகுதியாக பிளஸ் டூ தேர்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் மூன்று வருட பட்டயப் படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் 
1 7 2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

கூட்டுறவு மேலாண்மை பட்டிய பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் 
பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் 



பயிற்சிக்கு 15 5 2025 அன்று முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் 
விண்ணப்ப கட்டணம் ஒரு நூறு இணைய வழி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் 

ஒன்றுக்கு மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் தனித்தனியே இணைய வழியில் ஒரு 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் 

இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய 
கடைசி நாள் 20.6.2025 அன்று பிற்பகல் 5:00 மணி வரை 

மேலும் தகவல்களுக்கு


இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்றுநர் பயிற்சி நிலையங்களில் 2025- 26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஓராண்டு தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுனர்(ADMISSION FOR CRAFT INSTRUCTOR TRAINING SCHEME)பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்றுநர் பயிற்சி நிலையங்களில் 2025 -2026 ஆம் கல்வி ஆண்டுக்கான ஓராண்டு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சி  விண்ணப்பங்கள் 8. 5. 2025 முதல் 28. 5. 2025 வரை வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பதாரர்கள்  www.nimionlineadmission.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

 பயிற்சிக்கான இருக்கைகள் 15.6. 2025 அன்று நடைபெறும்.
நுழைவு தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பொறியியல் படித்த ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாகும்.

மேலும் விவரங்களுக்கு 9094317398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் 

குறிப்பு:மாணவியர்களுக்கு கல்வி மற்றும் தேர்வு கட்டங்களில் முழு விளக்கு உண்டு.

குறைந்த இடங்களை உள்ளதால் செயற்கைக்கு உடனடியாக தொடர்பு கொள்ளவும்

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் தூத்துக்குடி .(தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி குழு ) பொதுமுறை மாலுமி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.7.2025 முதல் தொடங்கப்பட உள்ள பொதுமுறை மாலுமி பயிற்சி ஆறு மாத காலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை கிளிக் செய்யவும்


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை அரசு கவின் கலை கல்லூரிகள் சென்னை கும்பகோணம் மதுரை மாணவியர் சேர்க்கை அறிவிப்பு 2025 26

சென்னை கும்பகோணம் மதுரை அரசு கவின் கலை கல்லூரிகளில் இளங்கலை கவின் கலை / பட்டப்படிப்பு (BFA)நான்கு வருடம்/முதுகலை கவின் கலை(MFA) இரண்டு வருடம்.
Visual communication design 
painting 
sculpture 
industrial design in ceramic 
industrial design in textile
 print making
   பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் சேர்க்கை பின்வரும் விவரப்படி விண்ணப்பங்களை 
www.artandculture.tn.gov.in
என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் 


விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 30 6 2025

 


சனி, 10 மே, 2025

SLAS தேர்வு 2025 பகுப்பாய்வு முடிவுகள் வெளியீடு

2025 பிப்ரவரி மாதம் 4, 5, 6 தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது மாநில அளவில் முதல் ஐந்து இடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் மாநில அளவிலான கடைசி ஐந்து இடங்கள் பெற்ற மாவட்டங்கள் மாநில அளவிலான முதலிடம் பெற்ற5 வட்டாரங்கள் மாநில அளவில் கடைசி 5 இடங்கள் பெற்ற வட்டாரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன 
மேலும் தகவல்களுக்கு 

வெள்ளி, 9 மே, 2025

நான் முதல்வன் திட்டம் மூலம் SSC, RRB மற்றும் BANK வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.





வயது வரம்பு: 21 முதல் 29 வரை
தகுதி : பட்டப் படிப்பு (degree) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி

1000 பேருக்கு 6 மாத காலம் உண்டு உறைவிட பயிற்சி அளிக்க திட்டம்.

நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர்
 https://www.naanmudhalvan.tn.gov.in
என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு தேர்வு வைத்து தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம் என அறிவிப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
13.5.2025

நுழைவுத் தேர்வு நாள், தகுதி ,யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள மேலும் தகவல்களுக்கு 

வியாழன், 8 மே, 2025

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிவடைந்தது தேர்வை 8 லட்சத்து 21,57 மாணவ மாணவிகள் எழுதினார் இத்தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டம் அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் இன்று வெளியிடப்பட்டது 

இத்தேர் உயிர் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாநிலத்தில் 98.8.2% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் முதலிடமும் 97.98% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாம் இடமும் 97.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடமும் 97.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் நான்காம் இடமும் 97.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஐந்தாம் இடமும் பிடித்துள்ளது.




அரசு/ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் வட்டார கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களுக்கு இட மாற்றப்பட வேண்டும் தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் செயல்பட்டு வந்தால் அவற்றை உடனடியாக பள்ளி வளாகத்துக்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யவும், பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகை வழங்கவும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல் முறையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 அந்த பணிகளை முடுக்கி விட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அரசு தொடக்க நடுநிலை பள்ளிகள் வளாகங்களில், இதுவரை மாவட்ட ,வட்டார கல்வி அலுவலர்கள் இயங்கி வந்தால் அது குறித்த விவரங்களை தொடக்க கல்வித்துறையில் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புதன், 7 மே, 2025

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

30.4. 2025 அன்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரே வட்டாரத்தில் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது இதுகுறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை. B.E./B.TECH/B.ARCH. பட்டப்படிப்பு சேர்க்கை 2025 -26 அறிவிப்பு

முதலாம் ஆண்டு BE/B.TECH /B.ARCH பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/ அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம்/ மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில்
https://www.tneaonline.org or https://dte.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம்  TNEA FACILITATION CENTRES அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
 விண்ணப்ப பதிவு கட்டணம்
OC /BC/ BCM/ MBC& DNC : ரூ 500 SC/SCA/ST:ரூபாய் 250 
பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் credit card /debit card/ net banking/ upi இணையதளம் வாயிலாக பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் THE SECRETARY TNEA payable at Chennai, 07.05. 2025 அன்றிலிருந்து பெற்ற வரையோலையை (demand draft) பதிவு கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம்(FTC) வாயிலாக மற்றும் சமர்ப்பிக்கலாம். கலந்தாய்வு விவரங்கள் வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்காணும் இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக 
விண்ணப்பம் பதிவு செய்ய ஆரம்பம் நாள் 7.5.2025 
இறுதி நாள் 6.6.2025 
மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய 
விண்ணப்பத்தினை பதிவு செய்யும்பொழுது அசல் சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை ( FTC)தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்டு அனுப்பப்படும்.தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும் .அனைத்து வகையான கலந்தாய்வுகளும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும் 
பகுதி நேர பட்டப்படிப்புகள் சேர்க்கை அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்

செவ்வாய், 6 மே, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்வு அரசாணை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதற்கான அரசாணை வெளியீடு 
அரசாணையை படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

சனி, 3 மே, 2025

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை 4.5.2025 நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம் பி பி எஸ், பி டி எஸ், சித்தா, யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் NEET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025- 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான NEET நுழைவுத் தேர்வு நாளை 4.5.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மின்னணு சாதனம் உள்ளிட்ட எவற்றையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி தங்களை தயார் செய்து கொண்டு தேர்வுக்கு செல்ல வேண்டும் 
பிற்பகல்இரண்டு மணிக்கு நடைபெறும் தொடங்கும் தேர்வுக்கு சரியாக 1:30 மணிக்கு மேல் வருபவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆகவே முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் மேலும் தகவல்களுக்கு
NEET WEBSITE ADDRESS    https://neet.nta.nic.in/
 என்ற இணையதளத்தில் இருந்து கொள்ளலாம்