GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 8 பிப்ரவரி, 2025

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளான சித்தா ஆயுர்வேதா யுனானி ஹோமியோபதி ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கையும் நுழைத்தேர்வுகள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல கால்நடை மருத்துவ படிப்புகளான பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இந்த நிலையில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நடைபெற்ற வருகிற மே மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது மாணவர்கள் https// neet.nta.nic.in, https// www .nta.ac.in a ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்  
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் மார்ச் 7ஆம் தேதி நள்ளிரவு 11:59 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு கட்டணமாக பொது பிரிவுக்கு ரூபாய் 1700 பிற்படுத்தப்பட்டோருக்கு ரூபாய் 1600 எஸ்சி/ எஸ்டி பிரிவுக்குரு ரூ.1000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி மற்றும் சேவை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்படும்.
 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது

புதன், 29 ஜனவரி, 2025

3,5,8 ஆம் வகுப்புகளுக்கு SLAS தேர்வுகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல் அறிவுரைகள்

SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்

4.2.2025 - Tuesday -  3 ஆம் வகுப்பு

5.2.2025 - Wednesday - 5 ஆம் வகுப்பு

6.2.2025 - Thursday - 8 ஆம் வகுப்பு

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்

 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்

 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல் 

 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்

 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்

 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்

 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்

 குறிப்பு:  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த நாள். இனிய நாளாக அமையட்டும்
             *28.1.2025*

*முடியாத ஒன்றையும் அடைவதற்கான ஒரே வழி: 'என்னால் முடியும்' என்ற நம்பிக்கை தான்.*

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

வெள்ளி, 17 ஜனவரி, 2025

NEET தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியம்

+2 படிக்கும் குழந்தைகள் & பெற்றோர் முக்கிய கவனத்திற்கு.

NEET - UG 2025 விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

NTA அறிவிப்பு - 14.01.25

NEET போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகள் தேர்வு எழுத விரும்பும் +2 மாணவ மாணவிகள் & பெற்றோர் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சங்கள்.

NEET - UG 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புதிதாக APAAR - ID அவசியம் தேவை.

APAAR - ID என்பது Automated Permanent Academic Account Registry - ID 

இந்த APAAR - ID இருந்தால் தான் NEET 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த APAAR ID பெற

உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உங்கள் பெயர் & பிறந்த தேதி எவ்வாறு உள்ளதோ அதே போல

உங்கள் ஆதார் அட்டையிலும் இருக்க வேண்டும்.

அதே போல் உங்கள் தற்போதைய முக அடையாளமும் Face Recognition - ஆதார் தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.

உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்டுள்ள Mobile எண் SIM Card Active ஆக Recharge செய்யப்பட்டு OTP பெறத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

மேற்காண் ஆதார் Updation சேவைகளை 

அனைத்து +2 படிக்கும் குழந்தைகளும் உடன் முடித்து வைத்துக் கொள்ளவும்.

அருகில் உள்ள வங்கிகள் - Banks & அஞ்சலகங்கள் - Post office & வட்டாட்சியர் அலுவலகங்கள் - Taluk office & ஊராட்சி - Panchayat office பேருராட்சி - Town Panchayat office  நகராட்சி - Municipal office மாநகராட்சி - Corporation office ஆகிய அலுவலகங்களில் செயல்படும் ஆதார் சேவை மையங்களில் 
செய்து கொள்ளலாம்.

ஆதார் திருத்தம் மிக மிக கவனம்.

ஒருவர் தனது பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே ஆதாரில் திருத்த முடியும்.

பிறந்த தேதியை வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே திருத்த முடியும்.

ஆகவே அனைவரும் திருத்தங்களை மேற் கொள்ளும் போது மிக மிக கவனமுடன் செயல்பட வேண்டும். 

 நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்
 Admit Card Download செய்யவும் 
Result Download செய்யவும் 
Counselling -ல் கலந்து கொள்ளவும் 
கல்லூரியில் அட்மிசன் கிடைக்கும் வரையும் OTP பெறத்தக்க வகையில் SIM Card Recharge செய்யப்பட்டு நடப்பில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.
மொபைல் நம்பர் மாற்றம் செய்யக்கூடாது 

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

TNSED APP UPDATE செய்ய DIRECT LINK

TNSED APP ஐ UPDATE செய்ய DIRECT லிங்க் இங்கே கிளிக் செய்யவும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை _சேலம்

நீலாம்பாள் சுப்ரமணியம் அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பழைய சூரமங்கலம், சேலம்-636005.

அரசு உதவிபெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடைய ஆசிரியர்கள் தேவை.

முதுகலை பட்டதாரி ஆசிரியர், நிரந்தர பணியிடம்
இயற்பியல்-1 
தாவரவியல் -1
ஆங்கிலம்-1.

கல்வித்தகுதி

M.Sc., Physics. with B.Ed.,
M.Sc., Botany with B.Ed.,
M.A.,English with B.Ed.,

இனசுழற்சி முறை
General

ஊதியம்
Level 18: 36900-116600.

விண்ணப்பங்கள்
இவ்வலுவலகத்திற்கு அனுப்ப
வேண்டிய கடைசி தேதி 20.01.2025.

நேர்முகத் தேர்வு நாள்
24.01.2025.

குறிப்பு
தகுதி வாய்ந்தோர் தங்கள் சுயவிவரம், சான்றிதழ் நகல்களுடன் 20.01.2025 மாலை 4.30 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ பள்ளி முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

  20.01.2025 மாலை 5  மணிக்குபள்ளிவிளம்பர பலகை/தங்கள்முகவரிக்குதபால்மூலமாக
நேர்முக தேர்விற்கான நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

செயலர்
நீலாம்பாள் சுப்ரமணியம் அரசு நிதியுதவி
பெறும் மேல்நிலைப்பள்ளி
பழைய சூரமங்கலம், சேலம் 636005.

தகவல்: தினத்தந்தி நாளிதழ்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
             *இந்த நாள்*
       *இனிய நாளாக*          
         *அமையட்டும்*
             *31.12.2024*

 *சிக்கலை கண்டு*
 *சிரமம் கொள்ளாது*
 *சிலந்திகள் போல* 
*முயற்சிகள் செய்தால்*
 *நாளும் சிறப்புகள்*
*நம்மை வந்து சேரும்* 

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

இந்திய தேசிய கணித தினம்


கணித மேதை சீனிவாச ராமானுஜன்
தந்தை பெயர்: குப்புசாமி சீனிவாச ஐயங்கார்
தாயார் பெயர்: கோமளத்தம்மாள்
பிறப்பு :டிசம்பர் 22, 1887 
பிறப்பிடம்: ஈரோடு தமிழ்நாடு 
இறப்பு :ஏப்ரல் 26, 1920 
பணி: கணிதம் மேதை  



 தேசிய கணித தினம்

 புகழ்பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் நமது அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

         ராமானுஜன், பெரும்பாலும் "முடிவிலியை அறிந்த மனிதர்" என்று கருதப்படுகிறார், எண் கோட்பாடு, இயற்கணிதம் மற்றும் கணித பகுப்பாய்வு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.  அவரது பணி கணிதத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கணிதவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது.

ராமானுஜன் எண்
ஹார்டி-ராமானுஜன் எண் என்றும் அழைக்கப்படும் ராமானுஜன் எண் 1729 ஆகும். பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மற்றும் இந்திய கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு காரணமாக இந்த எண் பிரபலமானது. மருத்துவமனையில் ராமானுஜனைச் சந்தித்த ஹார்டி, தாம் 1729 என்ற எண் கொண்ட டாக்ஸியில் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த எண் ராசியில்லா எண் என ஹார்டி கூறினார் அதற்கு ராமானுஜன் உடனடியாக 1729 உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது என்று பதிலளித்தார், ஏனென்றால் அது இரண்டு வெவ்வேறு வழிகளில் இரண்டு கனங்களின் கூட்டுத்தொகையாக வெளிப்படுத்தக்கூடிய மிகச்சிறிய எண்:  1729=1^3+12^3=9^3+10^3

ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்: 

 டிசம்பர் 22, 1887 அன்று தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த ராமானுஜன், தனது 12 வயதில் முக்கோணவியலில்  தேர்ச்சி பெற்று, தனது கணித அறிவை வெளிப்படுத்தினார்.

பெர்னவுலி   எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்பு கட்டுரையை ராமானுஜன் வெளியிட்டார் இதனால் உலகமே தமிழ் இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது

ராமானுஜனின் கணித திறமைக்கு பேராசிரியர் ஹார்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்தார் 

இந்தியாவின் பிரதமர் ஜவர்கலால் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலில் ராமானுஜனை பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனியும் ஸ்வீடனும் ஆண்டுதோறும் கணிதமேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாடு  நடத்துகின்றன இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 


மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் அங்கீகாரம்: 1912 ஆம் ஆண்டில், மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் எழுத்தராக பணிபுரிந்தபோது, அவரது கணித மேதைமை சக ஊழியர்களால் கவனிக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜி.எச்.ஹார்டியுடன் இணைத்தார்.

ஜி.எச். ஹார்டியுடன் ஒத்துழைப்பு: 1913 ஆம் ஆண்டில், ராமானுஜன் கணித மேதை ஹார்டியுடன் கடிதத் தொடர்பு கொண்டார், ஹார்டி ராமனுஜனின்  திறமையை அங்கீகரித்தார். இந்த ஒத்துழைப்பின் காரணமாக ராமானுஜன் 1914இல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

ராமானுஜனின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்: 

 ராமானுஜனின் பணி முடிவிலா தொடர்கள், தொடர்ச்சியான பின்னங்கள், எண் கோட்பாடு மற்றும் கணித பகுப்பாய்வு போன்ற அற்புதமான பகுதிகளை உள்ளடக்கியது, 3,900 க்கும் மேற்பட்ட தேற்றங்கள் மற்றும் முடிவுகள் அவரால் சுயமாக தொகுக்கப்பட்டன. இவர் அதிவடிவியல் தொடர், ரீமன் தொடர், நீள்வட்டத் தொகையீடுகள், மாறுபட்ட தொடர்கள் மற்றும் ஜீட்டா சார்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார்

ராமானுஜன் 1918 ஆம் ஆண்டில் டிரினிட்டி கல்லூரியின் முதல் இந்திய சக ஊழியரானார், மேலும் கணிதத்தில் அவரது பங்களிப்புகளுக்காக லண்டன் கணிதவியல் சங்கம் (1917) மற்றும் ராயல் சொசைட்டி (1918) ஆகிய இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கலாச்சார மரபு: தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி (THE MAN WHO KNEW INFINITY) என்பது இந்திய கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜனைப் பற்றிய 2015 பிரிட்டிஷ் வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இது 1991 ஆம் ஆண்டு ராபர்ட் கனிகல்   எழுதிய THE MAN WHO KNEW INFINITY  புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அவரது பயணத்தையும் சாதனைகளையும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்தது

அகால மரணம்: மோசமான உடல்நிலை காரணமாக 1919 இல் இந்தியா திரும்பிய ராமானுஜன் ஏப்ரல் 26, 1920 அன்று தனது 32 வயதில் காலமானார், உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

சிறப்புகள் 

இந்திய அரசு  2012 ஆம் ஆண்டு ராமானுஜரின் 125 வது பிறந்த நாளை ஒட்டி அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும் அவர் பிறந்த டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினமாகும் அறிவித்தது அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியும் கணித தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்திய அஞ்சல் துறை சார்பில் ஐந்து ரூபாய் தபால் தலை 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ராமானுஜனுக்கு கௌரவம் செலுத்தப்பட்டது. 

         எளிய கணக்கீடுகள் முதல் சிக்கலான சிக்கலைத் தீர்ப்பது வரை நமது அன்றாட வாழ்வில் கணிதம் இன்றியமையாத பகுதியாகும்.  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற பல்வேறு துறைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.  இயற்கையில் உள்ள சிக்கலான வடிவங்கள் முதல் நவீன தொழில்நுட்பத்தை இயக்கும் சிக்கலான வழிமுறைகள் வரை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள கணிதம் உதவுகிறது.

         தேசிய கணித தினத்தை கொண்டாடுவது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கணிதத்தின் அழகையும் முக்கியத்துவத்தையும் பாராட்ட ஊக்குவிக்கிறது.  உலகத்தைப் பற்றிய நமது புரிதலை வடிவமைத்த ராமானுஜன் போன்ற கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.


ராமானுஜனின் வாழ்க்கையும் பணியும் உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது.

தொகுப்பு : இரா முருகன் M.Sc.M.Ed.,பட்டதாரி  ஆசிரியர்     PUMS தேவண்ணகவுண்டனூர் ,சங்ககிரி.