GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

TNSED APP UPDATE செய்ய DIRECT LINK

TNSED APP ஐ UPDATE செய்ய DIRECT லிங்க் இங்கே கிளிக் செய்யவும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை _சேலம்

நீலாம்பாள் சுப்ரமணியம் அரசுநிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பழைய சூரமங்கலம், சேலம்-636005.

அரசு உதவிபெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடைய ஆசிரியர்கள் தேவை.

முதுகலை பட்டதாரி ஆசிரியர், நிரந்தர பணியிடம்
இயற்பியல்-1 
தாவரவியல் -1
ஆங்கிலம்-1.

கல்வித்தகுதி

M.Sc., Physics. with B.Ed.,
M.Sc., Botany with B.Ed.,
M.A.,English with B.Ed.,

இனசுழற்சி முறை
General

ஊதியம்
Level 18: 36900-116600.

விண்ணப்பங்கள்
இவ்வலுவலகத்திற்கு அனுப்ப
வேண்டிய கடைசி தேதி 20.01.2025.

நேர்முகத் தேர்வு நாள்
24.01.2025.

குறிப்பு
தகுதி வாய்ந்தோர் தங்கள் சுயவிவரம், சான்றிதழ் நகல்களுடன் 20.01.2025 மாலை 4.30 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ பள்ளி முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

  20.01.2025 மாலை 5  மணிக்குபள்ளிவிளம்பர பலகை/தங்கள்முகவரிக்குதபால்மூலமாக
நேர்முக தேர்விற்கான நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

செயலர்
நீலாம்பாள் சுப்ரமணியம் அரசு நிதியுதவி
பெறும் மேல்நிலைப்பள்ளி
பழைய சூரமங்கலம், சேலம் 636005.

தகவல்: தினத்தந்தி நாளிதழ்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

💐💐💐💐💐💐💐💐💐💐💐
             *இந்த நாள்*
       *இனிய நாளாக*          
         *அமையட்டும்*
             *31.12.2024*

 *சிக்கலை கண்டு*
 *சிரமம் கொள்ளாது*
 *சிலந்திகள் போல* 
*முயற்சிகள் செய்தால்*
 *நாளும் சிறப்புகள்*
*நம்மை வந்து சேரும்* 

     *இரா.முருகன் ஆசிரியர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

இந்திய தேசிய கணித தினம்


கணித மேதை சீனிவாச ராமானுஜன்
தந்தை பெயர்: குப்புசாமி சீனிவாச ஐயங்கார்
தாயார் பெயர்: கோமளத்தம்மாள்
பிறப்பு :டிசம்பர் 22, 1887 
பிறப்பிடம்: ஈரோடு தமிழ்நாடு 
இறப்பு :ஏப்ரல் 26, 1920 
பணி: கணிதம் மேதை  



 தேசிய கணித தினம்

 புகழ்பெற்ற இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் நமது அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

         ராமானுஜன், பெரும்பாலும் "முடிவிலியை அறிந்த மனிதர்" என்று கருதப்படுகிறார், எண் கோட்பாடு, இயற்கணிதம் மற்றும் கணித பகுப்பாய்வு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.  அவரது பணி கணிதத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கணிதவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது.

ராமானுஜன் எண்
ஹார்டி-ராமானுஜன் எண் என்றும் அழைக்கப்படும் ராமானுஜன் எண் 1729 ஆகும். பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி மற்றும் இந்திய கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு காரணமாக இந்த எண் பிரபலமானது. மருத்துவமனையில் ராமானுஜனைச் சந்தித்த ஹார்டி, தாம் 1729 என்ற எண் கொண்ட டாக்ஸியில் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த எண் ராசியில்லா எண் என ஹார்டி கூறினார் அதற்கு ராமானுஜன் உடனடியாக 1729 உண்மையில் மிகவும் சுவாரஸ்யமானது என்று பதிலளித்தார், ஏனென்றால் அது இரண்டு வெவ்வேறு வழிகளில் இரண்டு கனங்களின் கூட்டுத்தொகையாக வெளிப்படுத்தக்கூடிய மிகச்சிறிய எண்:  1729=1^3+12^3=9^3+10^3

ராமானுஜனின் வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்: 

 டிசம்பர் 22, 1887 அன்று தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த ராமானுஜன், தனது 12 வயதில் முக்கோணவியலில்  தேர்ச்சி பெற்று, தனது கணித அறிவை வெளிப்படுத்தினார்.

பெர்னவுலி   எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்பு கட்டுரையை ராமானுஜன் வெளியிட்டார் இதனால் உலகமே தமிழ் இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது

ராமானுஜனின் கணித திறமைக்கு பேராசிரியர் ஹார்டி நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்தார் 

இந்தியாவின் பிரதமர் ஜவர்கலால் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலில் ராமானுஜனை பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனியும் ஸ்வீடனும் ஆண்டுதோறும் கணிதமேதை ராமானுஜம் என்ற பெயரில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாநாடு  நடத்துகின்றன இதன் மூலம் தமிழரின் பெருமை போற்றப்படுகிறது. 


மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் அங்கீகாரம்: 1912 ஆம் ஆண்டில், மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில் எழுத்தராக பணிபுரிந்தபோது, அவரது கணித மேதைமை சக ஊழியர்களால் கவனிக்கப்பட்டது, அவர்களில் ஒருவர் அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜி.எச்.ஹார்டியுடன் இணைத்தார்.

ஜி.எச். ஹார்டியுடன் ஒத்துழைப்பு: 1913 ஆம் ஆண்டில், ராமானுஜன் கணித மேதை ஹார்டியுடன் கடிதத் தொடர்பு கொண்டார், ஹார்டி ராமனுஜனின்  திறமையை அங்கீகரித்தார். இந்த ஒத்துழைப்பின் காரணமாக ராமானுஜன் 1914இல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.

ராமானுஜனின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்: 

 ராமானுஜனின் பணி முடிவிலா தொடர்கள், தொடர்ச்சியான பின்னங்கள், எண் கோட்பாடு மற்றும் கணித பகுப்பாய்வு போன்ற அற்புதமான பகுதிகளை உள்ளடக்கியது, 3,900 க்கும் மேற்பட்ட தேற்றங்கள் மற்றும் முடிவுகள் அவரால் சுயமாக தொகுக்கப்பட்டன. இவர் அதிவடிவியல் தொடர், ரீமன் தொடர், நீள்வட்டத் தொகையீடுகள், மாறுபட்ட தொடர்கள் மற்றும் ஜீட்டா சார்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தார்

ராமானுஜன் 1918 ஆம் ஆண்டில் டிரினிட்டி கல்லூரியின் முதல் இந்திய சக ஊழியரானார், மேலும் கணிதத்தில் அவரது பங்களிப்புகளுக்காக லண்டன் கணிதவியல் சங்கம் (1917) மற்றும் ராயல் சொசைட்டி (1918) ஆகிய இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கலாச்சார மரபு: தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி (THE MAN WHO KNEW INFINITY) என்பது இந்திய கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜனைப் பற்றிய 2015 பிரிட்டிஷ் வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இது 1991 ஆம் ஆண்டு ராபர்ட் கனிகல்   எழுதிய THE MAN WHO KNEW INFINITY  புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அவரது பயணத்தையும் சாதனைகளையும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்தது

அகால மரணம்: மோசமான உடல்நிலை காரணமாக 1919 இல் இந்தியா திரும்பிய ராமானுஜன் ஏப்ரல் 26, 1920 அன்று தனது 32 வயதில் காலமானார், உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

சிறப்புகள் 

இந்திய அரசு  2012 ஆம் ஆண்டு ராமானுஜரின் 125 வது பிறந்த நாளை ஒட்டி அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும் அவர் பிறந்த டிசம்பர் 22ஆம் தேதி தேசிய கணித தினமாகும் அறிவித்தது அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியும் கணித தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்திய அஞ்சல் துறை சார்பில் ஐந்து ரூபாய் தபால் தலை 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு ராமானுஜனுக்கு கௌரவம் செலுத்தப்பட்டது. 

         எளிய கணக்கீடுகள் முதல் சிக்கலான சிக்கலைத் தீர்ப்பது வரை நமது அன்றாட வாழ்வில் கணிதம் இன்றியமையாத பகுதியாகும்.  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற பல்வேறு துறைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.  இயற்கையில் உள்ள சிக்கலான வடிவங்கள் முதல் நவீன தொழில்நுட்பத்தை இயக்கும் சிக்கலான வழிமுறைகள் வரை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள கணிதம் உதவுகிறது.

         தேசிய கணித தினத்தை கொண்டாடுவது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கணிதத்தின் அழகையும் முக்கியத்துவத்தையும் பாராட்ட ஊக்குவிக்கிறது.  உலகத்தைப் பற்றிய நமது புரிதலை வடிவமைத்த ராமானுஜன் போன்ற கணிதவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.


ராமானுஜனின் வாழ்க்கையும் பணியும் உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது மற்றும் கவர்ந்திழுக்கிறது.

தொகுப்பு : இரா முருகன் M.Sc.M.Ed.,பட்டதாரி  ஆசிரியர்     PUMS தேவண்ணகவுண்டனூர் ,சங்ககிரி.  



திங்கள், 22 ஜூலை, 2024

அலுவலக கடிதம் எழுதும் போது நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்கள் ... ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்


 தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்  அவர்களின்  சிறப்புரை. 
அதில்  நமக்கு தெரியாத சில அடிப்படையான பயனுள்ள தகவல்களை அளித்தார்கள்.

நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில தவறுகளை பொதுவாக செய்கிறோம். அவற்றை திருத்திக் கொள்வதற்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அதில் சிலவற்றை  தெரிந்து கொண்டு பின்வரும் காலங்களில் நாம் அவற்றை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.


💐" தலைமை ஆசிரியர்" அன்று எழுதும் பொழுது நாம் துணை எழுத்து மேல் புள்ளி வைக்க கூடாது.
ர் என்று எழுதும் போது இவ்வாறு தான் எழுத வேண்டும்.

💥தலைமை ஆசிரியை என்ற ஒரு சொல் கிடையாது. ❌ ஆண்/ பெண் இருபாலரும் ஆசிரியர் தான் ஆசிரியை என்று குறிப்பிட கூடாது. ❌
ஆசிரியை என்று ஒரு சொல் கிடையாது.❌

💥 அதே போல் ஆங்கிலத்தில் HEADMASTER / TEACHER.. தான் சரி..
HEADMISTRESS  என்பது தவறு.. ❌

💐 நாம் கடிதம் எழுதும் பொழுது பதவியை குறிக்கும் போது மேதகு/ மாண்புமிகு/ மதிப்பிற்குரிய போன்ற மரியாதை சொற்களை சேர்க்கத் தேவையில்லை. வட்டார கல்வி அலுவலர் /இயக்குநர்/ மேலாளர் இவை அனைத்தும் பதவியின் பெயர். அதனால் அவை  அஃறினை சொல். அதனால் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் என்று எழுதத் தேவையில்லை. அனுப்புநர்/ பெறுநர் இதுவே சரியான சொல்லாகும். இச்சொல் முடியும்போது முற்றுப்புள்ளி /காற்ப்புள்ளி/ அரை புள்ளி இடத் தேவையில்லை.

💐 தொடக்கப்பள்ளி/ நடுநிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ இவை அனைத்தும் ஒரே சொல் தான். இவற்றை எழுதும்போது இடைவெளி விட்டு எழுத தேவை இல்லை.

💐 வடமொழிச் சொற்களை எழுதும்போது ஜூலை என்பதற்கு பதிலாக ஜீலை என்று எழுதுகிறோம். இது பொதுவான தவறாக உள்ளது.

💐கடிதம் எழுதும் போது
இடம்:
 நாள்:
 என்று தான் குறிப்பிட வேண்டும்.

💐 பொதுவாக  இருவரும் என்று எழுதக்கூடாது. இரண்டு பேரும் என்று தான் வாக்கியம் வர வேண்டும் .

💐நாட்கள் என்று எழுதக்கூடாது. நாள்கள் என்று தான் எழுத வேண்டும்.

💐 தனியர்/ அன்னாரது என்று சொற்களை கடிதத்தில் பயன்படுத்தக்கூடாது. இவை காலம் சென்ற மனிதர்களையே குறிக்கக்கூடிய அஃறினை சொல்லாகும். அவற்றை நாம் கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதை தவிர்க்க வேண்டும். 

💐கடிதத்தை முடிக்கும் பொழுது கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று எழுதுகிறோம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்பதும் அஃறினை பொருட்களை குறிக்கும் சொல்லாகும். கேட்டுக்கொள்ள பெறுகிறீர்கள் என்றே முடிக்க வேண்டும்.

💐நம் பெயர் எழுதும்போது M என்ற  initial எழுத்தை எம் என்று எழுதுகிறோம். அவ்வாறு எழுத கூடாது. பெயரின் முதல் தமிழ் எழுத்தாகிய ம என்ற எழுத்தையே எழுத வேண்டும்.

💐 திருவாளர் என்னும் சொல்லையே சுருக்கமாக திரு என்று குறிப்பிடுகிறோம்.
எடுத்துக்காட்டாக 
திரு.மோகன் என்று எழுத வேண்டும். ஆனால் திருமதி என்பது முழு சொல்லாகும்.
அதனை எழுதும் பொழுது முற்றுப்புள்ளி வைக்க கூடாது.
திருமதி மோகனா என்று எழுத வேண்டும்.
இதைப் போன்று நிறைய பயனுள்ள தகவல்களை வழங்கினார்.நாம் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யாமலும் நம் மாணவர்களுக்கும் இக்கருத்துகளை கொண்டு செல்வோம் என்பதற்காக இப்பதிவு. 

நன்றி..