GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 3 மே, 2024

18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து

*கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.*

பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில் TNPSC குளறுபடி.

4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, மாற்றியமைப்பட்ட
பட்டியலை வெளியிட உத்தரவு.

என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்: நாளை மறுதினம்

 +2 தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் என்ஜினீயரிங்  படிப்புகளுக்கான  ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளதாக என்ஜினியரிங் சேர்க்கை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும், ஜூலை 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது.


பிளஸ் டூ முடித்த பிறகு என்ன செய்யலாம் வழிகாட்டி நிகழ்ச்சிமே மாதம், 4 ஆம் தேதி காலை 10 மணி முதல்


10 மற்றும் 12 வகுப்பு #மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து அடுத்து #என்ன_படிக்கலாம், #எங்கே_படிக்கலாம் என்ற கேள்விக்கு பதில் அளிக்க #கல்வியாளர்கள் மற்றும் துறை #வல்லுநர்கள் கொண்டு வழிகாட்டல் நிகழ்வு வரும் மே மாதம், 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் #what_next என்ற பெயரில் நிகழ்சி https://www.pktgbhssalumnitrust.com என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மாணவ‌ர்க‌ள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களை +91 89406 04569 என்ற எண்ணிலும் https://t.ly/whatnext என்ற  Zoom link லும் நேரடி ஒளிபரப்பில் தொடர்பு கொண்டு கேட்டு தெளிவு பெறலாம்.. 

இந்த விசயத்தை மக்களிடம் கொண்டு செல்ல #ஷேர் செய்யவும்.. எதாவுது ஒரு மாணவ மாணவிக்கு பயன்படலாம்

வியாழன், 2 மே, 2024

*"தலைமை ஆசிரியர் பதவிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் ஏன்? - தொடக்கக் கல்விஇயக்குநர் விளக்கம்"*


மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது.

பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி  வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  தெரிவித்தார்கள்.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்க