GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 3 மே, 2019

வேளாண் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும், 8ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை, 2019 -20ம் கல்வியாண்டில், 10 பட்டப்படிப்புகளை, 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லுாரிகள் மூலம் வழங்குகிறது. கடந்தாண்டு முதல் வேளாண் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால், இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேளாண் பல்கலையின்,www.tnau.ac.in/admission.htmlஇணையதளத்தில், வரும், 8ம் தேதி முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்யலாம். ஜூன் 7ம் தேதி பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவு செய்த பின், விண்ணப்ப கட்டணத்தை இணையதள வங்கி அல்லது டெபிட், கிரெடிட் கார்டு வழியாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய, ஜூன், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 11 முதல், 13 வரை நடைபெறும். தரவரிசை பட்டியல், ஜூன் 20ல் வெளியிடப்படும். இளங்கலை சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு, 0422 - 6611345 / 6611346 ஆகிய எண்களில் காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலம்

மாணவர்கள் புகைப்படத்துடன் 'ஆன்லைன் 'டிசி': இந்த ஆண்டு முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு

மே 03,2019இந்த ஆண்டு முதல் மாணவர்கள் புகைப்படத்துடன்' ஆன்லைன்' மாற்றுச் சான்றிதழ் ('டிசி') வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்கள் குறித்து 'எமிஸ்' மூலம் முழுவிபரம், ஆதார் எண்ணுடன் கல்வித்துறை 'சர்வரில்' பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு வரை கையால் எழுதி 'டிசி' தலைமையாசிரியர் கையெழுத்துடன் வழங்கப்பட்டது. 


நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளுக்கும் டிஜிட்டல் மயமாக ஆன்லைன் 'டிசி' வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாரியாக 11 எண் கொண்ட 'யூடிஎஸ்' எண் கல்வித்துறை வழங்கியுள்ளது. கம்ப்யூட்டரில் அதனை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளி சர்வரில் மாணவர்களை பற்றிய விபரங்கள் இருக்கும். 

மாணவரின் 'எமிஸ்' எண்ணை டைப் செய்தால் அதில் அவரின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, மதம், பெற்றோர் பெயர், பள்ளியில் சேர்ந்த தேதி, கடந்த ஆண்டு படித்த வகுப்பு, தேர்ச்சி பெற்ற வகுப்பு போன்றவை தெரியவரும். மாணவரின் மச்ச அடையாளங்களை பதிவு செய்து தலைமையாசிரியரின் டிஜிட்டல் கையெழுத்துடன் பிரின்ட் எடுக்கலாம்.

இரு நகல்கள் மாணவர்கள் புகைப்படத்துடன் கிடைக்கும். அதில் ஒன்று மாணவர்களுக்கும், மற்றொன்று பள்ளி ஆவணமாகவும் பராமரிக்கப்படும்.

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு விடுதி சென்னை, ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த முதன்மை விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளாக உருவாகலாம். இதற்கென பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு மே 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு விடுதியில் தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் ஆகிய பயிற்சியும், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் 2019--20ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

இன்ஜினியரிங் 'கட் ஆப்' மதிப்பெண்ணை கணக்கிடும் முறை

இன்ஜினியரிங் 'கட் ஆப்' மதிப்பெண்ணை கணக்கிடும் முறையில் குழப்பம் வேண்டாம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை தமிழக உயர் கல்வித்துறை நேரடியாக நடத்த உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. 
இதன்படி கட் -ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதாவது கணிதத்தில் 200க்கு பெறும் மதிப்பெண் 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும். இயற்பியல் வேதியியல் பாடங்களின் 200 மதிப்பெண்கள் 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இறுதியில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கட் - ஆப் கணக்கிடப்படும்.அதாவது கட் ஆப் 200 மதிப்பெண்ணில் 50 சதவீதம் கணித மதிப்பெண்ணாகவும் தலா 25 சதவீதம் இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும். இந்த சதவீதத்தில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இருக்காது என இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது கணித மதிப்பெண் 100க்கு வழங்கப்பட்டுள்ளது அப்படியே எடுக்கப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில் வழங்கப்பட்டுள்ள 100 மதிப்பெண் பாதியாக மாற்றப்படும். இறுதியில் 200 மதிப்பெண்களுக்கு கட் - ஆப் கணக்கிட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீட்' நுழைவு தேர்வு மே 5ம் தேதி நடத்தப்படுகிறது

நீட்' நுழைவு தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர முடியும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, வரும், 5ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இறுதி கட்ட, நீட் பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியாகின்றன.


பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்களை மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., வழியாக, மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச், 14 முதல், மார்ச், 29 வரை நடத்தப்பட்டது. தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 12 ஆயிரத்து, 546 பள்ளிகளைச் சேர்ந்த, 4.76 லட்சம் மாணவியர் உட்பட, 9.60 லட்சம் பேர் மற்றும் 38 ஆயிரம் தனி தேர்வர்கள் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு, தேர்வு துறையால் வெளியிடப்படுகின்றன. 

மாணவ -- மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய மொபைல்போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மேலும், www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, மதிப்பெண்ணை பார்க்கலாம். மாவட்ட வாரியாக கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து நுாலகங்களிலும், தேர்வு முடிவை தெரிந்துக் கொள்ளலாம். அவரவர் பள்ளிகளிலும், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். 
மதிப்பெண் சான்றிதழ்தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, வரும், 2ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் படித்த பள்ளிகளில் கிடைக்கும். தனி தேர்வர்கள், வரும், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் எப்படி?மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுவோர், தங்கள் விடைத்தாளின் மதிப்பெண்ணை மறுகூட்டல் செய்துக்கொள்ளலாம். இதற்கு, வரும், 2ம் தேதி முதல், 4ம் தேதி மாலை, 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே, விண்ணப்பிக்க வேண்டும். 
மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்துக் கொள்ளலாம். மறுதேர்வுஇந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு, ஜூன், 14 முதல், 22ம் தேதி வரை, சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

திங்கள், 11 மார்ச், 2019

வில்லங்க சான்றிதழ் பெற திடீர் கட்டுப்பாடு


வீடு, மனை வாங்குவோர், அதற்கான வில்லங்க சான்றிதழ் கோரி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வீடு, மனை வாங்கியவர்கள், புதிதாக வாங்குவோர், சொத்தின் முந்தைய பரிமாற்ற விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியம். 'வில்லங்க சான்றிதழ்களை பெற, பொது மக்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பதிவுத்துறை அறிவித்தது.

ஆனால், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை ஏற்பதில்,சார் பதிவக பணியாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், பதிவுத்துறை இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: பதிவுத்துறை அறிவிப்பின்படி, 1975ம் ஆண்டு முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள், வில்லங்க சான்றிதழில் இடம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில், 1987 முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இதிலும், சொத்தின் சர்வே எண், அதன் இருப்பிடம், விண்ணப்பதாரர் குறித்த விபரங்கள் தான் அவசியம். ஆனால், தற்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது, சொத்தின் பரப்பளவு குறித்த விபரம் கேட்கப்படுகிறது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால், சாதாரண மக்கள் குழப்பம் அடைகின்றனர். 

எனவே, ஆன்லைன் முறையில், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று அமலுக்கு வந்தன. நடத்தை விதிகள் விபரம்:

பல்வேறு இனம், ஜாதி, சமயம், சமூகத்தினர் மற்றும், மொழியினருக்கு இடையே இருந்து வரும் வேற்றுமைகள், வெறுப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலோ, பதற்றத்தை கூடுதலாக்கும் நடவடிக்கைகளிலோ, எந்த கட்சியும், வேட்பாளர்களும் ஈடுபடக் கூடாது


* அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை குறை கூறும்போது, அது, அக்கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள் மற்றும் பணிகள் குறித்ததாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மீதான, சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையும், திரித்து கூறப்படும் செய்திகளையும், தவிர்க்க வேண்டும்

* தேர்தல் பிரசாரத்திற்கு, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது

* ஊழல் நடவடிக்கை, வாக்காளர்களுக்கு லஞ்சம், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகளின் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில், தொண்டர்கள் ஈடுபடாமல் இருப்பதை, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு விதிகள்?

* அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வராத வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

* அமைச்சர்கள், தங்கள் அரசு அலுவல் பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு இயந்திரத்தையோ, ஊழியர்களையோ, பயன்படுத்தக் கூடாது

* ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ, வாகனங்களையோ, இதர அரசு இயந்திரங்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது

* ஓய்வு இல்லங்கள், விடுதிகள் மற்றும் இதர அரசு தங்கும் இடங்களை, எந்த கட்சியும் பிரசார அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தெரசா பல்கலையின் துணைவேந்தரை தேர்வு செய்ய, தனியார் கல்லுாரி முதல்வர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வி கட்டுப்பாட்டில், கொடைக்கானலில், தெரசா மகளிர் பல்கலை செயல்படுகிறது.இந்த பல்கலையின் துணைவேந்தர், வள்ளியின் பதவி காலம் முடிந்துள்ளது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை, வேப்பேரியில் உள்ள சாந்தி விஜய் ஜெயின் கல்லுாரி முதல்வர், மாலதி தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர், மஞ்சுளா; அழகப்பா பல்கலையின் முன்னாள் பேராசிரியர், பிரேமா ஆகியோர், உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.இந்த பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் உள்ள, தகுதியானவர்கள், ஏப்., 9, மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பங்களை தபாலிலோ, இ - மெயில் வழியாகவோ அனுப்பலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை சைனிக் பள்ளி, 2019 - 20ம் கல்வி ஆண்டில், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் தற்காலிக தகுதி பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிக்கு, 2019 - 2020ம் கல்வியாண்டில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றும், உடல் நலத் தகுதியோடும், உடுமலை, அமராவதி நகர் சைனிக்பள்ளிக்கு தேர்வு செய்யபட்ட மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தற்காலிக தகுதி பட்டியல்,www.sainikschoolamaravathinagar.edu.inஎன்ற பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவலை, சைனிக் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 9 மார்ச், 2019

எஸ்.ஐ., தேர்வு அறிவிப்பு தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை,www.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும், நாளை, போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து போடப்பட உள்ளது. போலியோ தடுப்பு நடவடிக்கைகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தியதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத நாடாக, இந்தியா உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கும் வகையிலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம், இரண்டு தவணைகளாக நடைபெற்று வந்தது.

இந்தாண்டு முதல், ஒரே தவணையாக, மார்ச், 10ல், முகாம்களை நடத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம், நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 'விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில், வீடு வீடாக சென்று, போலியோ சொட்டு மருந்து போடப்படும்' என்றனர்.

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டத்தை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வியில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வியாண்டில், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆனால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு, ஏழு, பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகமாகும். மற்ற வகுப்புகளுக்கு, அதாவது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, அடுத்த, 2020 - 21ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகும் என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புளுக்கும், ஜூன் மாதம் துவங்கும், கல்வி ஆண்டிலேயே, புதிய பாட திட்டம் அமலுக்கு வரும், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது