GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 7 ஜனவரி, 2019

பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும்.விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறை

விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் இந்த மாதம் தொடங்கும் கும்பமேளா விழாவையொட்டி ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு சோதனை திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள 202 பெரிய ரெயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின்படி பயணிகள் செல்லும் ரெயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள நுழைவு வாயில் மூடப்படும்.

மற்ற இடங்களில் உள்ள நுழைவு வாயில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள். மேலும் தானியங்கி மூடும் கதவுகள் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பயணிகள் நுழைவது தடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும். ஒவ்வொரு நுழைவு பகுதிகளிலும் பயணிகளிடம் தோராய முறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.

2016-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை 202 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு கட்டுப்பாடு, பயணிகள் மற்றும் உடைமைகள் சோதனை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் போன்றவை அடங்கும். மேலும், பயணிகள் நுழைவு வாயில்கள் வழியாக வருவது முதல் அவர்கள் ரெயில்களில் ஏறும் வரை கண்காணிக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.385 கோடி செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில் நிலைய வளாகத்துக்குள் பயணிகள் நுழையும்போதே இந்த சோதனை நடத்தப்பட்டுவிட்டால் பயணிகள் அதிகம் கூடும் நேரங்களில் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே செல்லவேண்டி இருப்பது போன்ற இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது


பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி ஜன., 12க்குள் பொருத்த உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், 'பயோமெட்ரிக்' கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசாணைவருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த, தலா, இரண்டு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.தமிழகத்தில், 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 413 வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கும், தலா, ஒரு கருவி வீதம், 978 பயோமெட்ரிக் கருவிகள் வழங்கும் பணிகள் நடக்கின்றன.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கூரியர்பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை, வரும், 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து

அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து செய்யப்படுகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை எழுதும் பழக்கம் இருந்தது. புத்தகங்களை சுமந்து செல்லவும், அதிக பாடங்களை படிக்கவும், மாணவர்கள் சிரமப்படுவதாகக்கூறி, சில ஆண்டுகளுக்கு முன், முப்பருவ கல்வி முறையை அரசு செயல்படுத்தியது.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்களுக்கும், தனித்தனியாக புத்தகங்களை வழங்கி, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்ததும், அந்தப் பருவத்திற்குரிய பாடப்புத்தகம் தேவைப்படாது. அடுத்த பருவத்திற்குரிய பாடப்புத்தகத்தை படித்தால் போதும்.ஆனால், 10ம் வகுப்பில், முப்பருவ கல்வி முறை இல்லை. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை படித்த மாணவர்கள், 10ம் வகுப்பில் மொத்தமாக அனைத்து பாடங்களையும் படிப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் தரமும் குறைவதாக, ஆசிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, 2019 - 20ம் ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய, கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை தொடரும்.

எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்:தமிழகத்தில், வரும், 21ல், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் உருவாக்கப்படும். எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, மடிக்கணினி வழங்குவது குறித்து மத்திய அமைச்சரிடம் பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையில், தமிழகத்தில் மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில், புத்தகத்தை ஏந்தி செல்லும் மாணவர்கள், எதிர்காலத்தில், மடிக்கணினியை ஏந்தி செல்லும் வரலாற்றை உருவாக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர்,  கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறைக்காக, மிக விரைவில், 'ஸ்டுடியோ' ஒன்றும், கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, தனியாக சேனல் ஒன்றும் உருவாக்கப்படும்.. அரசு பள்ளிகளில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பை துவங்க, நீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது. இதற்காக வரும், 21ல், சமூக நலத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆதார் கட்டாயம் : , 'ஸ்மார்ட்' தொழில் நுட்பம் அறிமுகம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, 'ஸ்மார்ட்' தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்துகிறது.விண்ணப்ப படிவங்களை பெற்று, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை, சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்நிலையில், இன்னும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 'டெண்டர்' முறையில் வழங்கப்பட உள்ளன. புதிய முறைப்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும், கணினி, டேப்லெட், மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதேபோல, டி.என்.பி.எஸ்.சி., பெயரில், 'மொபைல் ஆப்'பும், தயார் செய்யப்பட உள்ளது; அதிலும், பதிவு செய்யலாம்.விண்ணப்பம் பதிவு செய்வது, கட்டணம் செலுத்துவது, கட்டண சலுகை பெறுவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்வது, ஒரு முறை பதிவை மேற்கொள்வது என, அனைத்து பணிகளையும், ஆன்லைனில் தேர்வர்கள் மேற்கொள்ள முடியும். இந்தப் பதிவின் போது, அனைத்து தேர்வர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில், அலர்ட்' செய்திகள் அனுப்பப்படும்.மேலும், அனைத்து தேர்வர்களும், ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம். மத்திய அரசு விதிகளின் படி, ஆதார் எண்ணை வேறு பயன்பாட்டுக்கு வழங்காமல், தேர்வர்களின் விபரங்களை சரிபார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல, தேர்வர்களின் போலி விண்ணப்ப பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கண்டுபிடிக்கவும், ஆதார் எண் பயன்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய், இன்று(ஜன.,07) முதல், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது.


அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், 1,000 ரூபாயும், பொங்கல் பரிசாக வழங்கப்படும் என, சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

பரிசுப்பொருள் வினியோகத்தை, முதல்வர், பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும், 1,000 ரூபாய், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்காதோர் மற்றும் தவற விட்டோர், ஆதார் அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

சனி, 5 ஜனவரி, 2019

ஜன. 21ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல், வரும், 21ம் தேதி வெளியிடப்பட உள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 3 முதல், அக்., 31 வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அவற்றை பரிசீலனை செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புயல் பாதித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அவகாசம் கேட்டதால் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.'திருவாரூர் சட்டசபை தொகுதி தவிர அனைத்து சட்டபை தொகுதிகளிலும் வரும், 21ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேல்நிலை எச்.எம்., நிலைக்கு உயரும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம்


வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முடிவுக்கு வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் 2017 மே மாதத்தில் இருந்து தொடர்ந்து பல சீர்த்திருத்தங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டன. நர்சரி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கவனிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டன. இதற்காக கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவங்கப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டனர்.தற்போது தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன. தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும்  ஆசிரியர்களே வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் வட்டாரக் கல்வி அலுவலர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதன்மூலம் அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்ய முடியும். ஏற்கனவே வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முழுமையாக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும்

8ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' : வரும் கல்வி ஆண்டில் ரத்து

எழுத படிக்க தெரியாதவர்களையும், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டம், வரும் கல்வி ஆண்டில், ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டப்பூர்வ ஆலோசனைகள் துவங்கியுள்ளன.மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, அனைத்து மாணவர்களுக்கும், 14 வயது வரை, கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிபந்தனையை அடுத்து, அனைத்து மாநிலங்களும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை இடைநிறுத்தம் இன்றி, 'ஆல் பாஸ்' செய்து வந்தன. இதனால், அனைத்து மாணவர்களும் படிக்காத நிலையிலும், அடுத்தடுத்த வகுப்புக்கு பாஸ் செய்யப்பட்டனர்.எழுத படிக்க தெரியாத மாணவர்களும், எட்டாம் வகுப்பை தாண்டி, ஒன்பதாம் வகுப்பு வரை முன்னேறினர். அதேநேரம், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில், தமிழிலோ அல்லது அவரவர் மாநில மொழிகளிலோ வாசிக்க தெரியாமல் திணறினர். இவர்களில் பலர், ஒன்பதாம் வகுப்புக்கு வந்த பின், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன், இடையில் கல்வியை நிறுத்தினர்.இதுகுறித்து, மத்திய அரசு கமிட்டி அமைத்து ஆய்வு செய்ததில், பெரும்பாலான பள்ளிகள் பாடமே நடத்தாமல், மாணவர்களுக்கு தேர்ச்சி மட்டும் அளித்தது தெரியவந்தது. எனவே, கல்வி தரத்தை பாழடிக்கும், ஆல் பாஸ் சட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு மசோதா உருவாக்கியது. அது, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றியுள்ளது.எனவே, அனைத்து மாநிலங்களிலும், ஆல் பாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும். இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி துறையும் ஆலோசனையை துவங்கியுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய நடைமுறைப்படி, ஐந்து ஆண்டுகளில், பத்தாம் வகுப்புக்குள் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பட்டியல் எடுக்கப்படுகிறது. அதன்பின், இடைநிற்றலுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, ஆல்பாஸ் வழங்குவதா அல்லது ஐந்தாம் வகுப்புடன் நிறுத்துவதா என, முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில், மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.

இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.

இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.

இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிகள் வழியாக அல்லாமல், தனி தேர்வராக எழுத விரும்புவோர், ஜன., 7 முதல், 14 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின், சேவை மையங்கள் வழியாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி, நிபந்தனை, தேவைப்படும் சான்றிதழ் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்'

  இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒரு வாரத்தில், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், அந்தந்த மாநில பல்கலைகளில், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், 733 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும், நிர்வாகம் சார்ந்த, 11 அம்சங்களை கல்லுாரி இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அவற்றை உரிய நேரத்தில், புதுப்பிக்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பெரும்பாலான கல்லுாரிகள் பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்டன. 

இது குறித்து, தேசிய கல்வியியல் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன.அதனால், இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 'பல முறை அறிவுறுத்தியும், இணையதளத்தை பராமரிக்காதது ஏன் என்ற விளக்கத்தை, வரும், 11ம் தேதிக்குள், பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?




*சென்னையில், லயோலா, மியாசி, முத்துக்குமரன், ராஜலட்சுமி, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின், 'நிப்மெட்' கல்லுாரிகள்; கோவையில், பிஷப் அப்பாசாமி, சி.எம்.எஸ்., ஹிந்துஸ்தான், கலைவாணி, கஸ்துாரி, பி.பி.ஜி., செயின்ட் மார்க் கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன 

* கடலுார், மாதா, பிளஸ்ஸி, விருதாம்பிகை, பவானி, ஆற்காட் லுத்ரன் கல்லுாரிகள்; காஞ்சிபுரம், கிறிஸ்ட், முகமது சதக், காஞ்சி, ராஜலட்சுமி, லட்சுமி அம்மாள் கல்லுாரிகள்; மதுரை சி.எஸ்.ஐ., - கே.எஸ்.எம்., - ராயல் கல்லுாரி, அரோபிந்தோ மீரா, ஸ்டீபன், யாதவா, ஆசிபா கல்லுாரிகள்

* திருநெல்வேலி, ஸ்ரீராம் நல்லமணி யாதவ், யு.எஸ்.பி., செயின்ட் ஜான்ஸ், மகாத்மா காந்தி உட்பட, தமிழகம் முழுவதும், 558 கல்லுாரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.