GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 19 ஜூலை, 2018

அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்

அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உயர்கல்வி படிப்பது, வெளிநாடு செல்வது, சொத்துகள் வாங்குவது, அரசின் பிற துறைகளின் வேலைக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு, நியமன அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.இதன்படி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்து, அனுமதி பெற்று வந்தனர். பள்ளிக்கல்வி துறையில், தற்போது நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டதால், சி.இ.ஓ.க்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.எனவே, உயர்கல்வி படிப்பதற்கான அனுமதி பெறுவது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு, ஆசிரியர்களின் கோப்புக்களை, சி.இ.ஓ.,க்களே ஆய்வு செய்து, விதிப்படி அனுமதி வழங்கலாம் என, பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில், போலியை தடுக்கும் வகையில் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை டிஜிட்டல் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், அலைபேசி எண் உள்பட பல்வேறு விபரங்களை, எமிஸ் இணையத்தில் பதிவு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், இந்த விபரங்களை, மாணவர்களின் வகுப்புக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதன்படி இந்த ஆண்டு ஜூலை 15க்குள் எமிஸ் விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது.மாணவர் சேர்க்கை தொடரும் நிலையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு, புதிய பாடத்திட்ட பயிற்சி போன்ற கூடுதல் சுமைகள் உள்ளதால், எமிஸ் பதிவு பணிகளுக்கு, வரும் 31ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல்

ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,' என, சைபர் கிரைம் போலீசார், மாவட்ட இணைய வழி குற்றங்களை கண்காணிக்கும் பிரிவு போலீசாரை உஷார் படுத்தி உள்ளனர்.இந்திய உளவுத் துறைக்கு கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த (டேட்டா கேட்சர்) தகவல்களை திருடும் நிபுணர்கள், இந்தியாவில் ' ஐ- போன் ' பயன்பாட்டாளர்களான தொழிலதிபர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய நபர்களின் தகவல்களை விசேஷ மென்பொருள் மூலம் திருடும் கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது. இதனால் மாநில சைபர் கிரைம் போலீசார், மாவட்ட சைபர் கிரைம் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகளை உஷார் படுத்தி உள்ளனர்.இந்த ஐ-போன் 'ஹை ஜாக் கேக்கர்ஸ்' தொழில்நுட்பம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'முதற்கட்டமாக முக்கிய நபர்கள் பயன்படுத்தும் 13 ஐ-போன்களின் தகவல்கள் வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஐ-போன் பாதுகாப்பாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தவறான, தேவையற்ற எஸ்.எம்.எஸ்., இணைப்புக்கள், தேடுதல் குறித்த இணைய வழி குறிப்புக்களை பதிவிறக்கம் செய்வதையோ, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்புகளையோ பயன்படுத்த வேண்டாம்.மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து முன் எச்சரிக்கையாக புகார் அளிக்கலாம்,' என்றனர்.

மொபைல் ஆப் மூலம் எந்த புத்தகம் எந்த நூலகத்தில் உள்ளது என அறியலாம்

எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது. மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது.-

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, நாளை, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுஉள்ளது.சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தள்ளி வைப்புசிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்டோருக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் மட்டும், இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதன், 18 ஜூலை, 2018

புதிய பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து, அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த உதயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கல்வி ஆண்டு முதல், 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடப் புத்தகம் சிபிஎஸ்இ, எஸ்சிஆர்டி உள்ளிட்ட பிற மாநில பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமாகத் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் இழையோடுகிறது.
அகில இந்திய அளவில், தமிழகம்தான் இந்தப் பாடப் புத்தக விரைவுக் குறியீடுகளை இணைய வழியில் பயன்படுத்தி, புதிய பாடத் திட்டத்தை பொதுமக்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்த்ததில் முன்னிலை பெற்றுள்ளது. சராசரியாக நாளுக்கு 2 லட்சம் பேர் காணொலி காட்சி வாயிலாகப் பார்த்து, கற்று மகிழ்ந்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில், பிளஸ் 1 புதிய பாடத் திட்டம், பிளஸ் 2 பாடத் திட்டத்திலிருந்து 99 சதவீத கேள்விகள் இடம் பெற்றுள்ளன. புதிய பாடத் திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
புதிய பாடத் திட்டத்தை மாணவர்கள் முழுமையாகப் படிப்பதுடன், ஆசிரியர்களும் கற்பிக்க உழைக்கும் பட்சத்தில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றியைக் குவிப்பர். பாடப் புத்தகங்களை இன்னும் சிறப்பாக மாணவர்களிடம் எடுத்துச் செல்ல தமிழகம் முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்கவும், கல்வியை மேம்படுத்தவும் இந்த பயிற்சிகள் பயன்பெறும். ஆசிரியர்கள் இதற்கான தகுதியைப் பெற தொடர் பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமன்றி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடப் புத்தகமும் 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைத்துள்ளதால், ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்றார்

கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் பல்வேறு கல்வித்திட்டங்கள் செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த திட்டங்களை செயல்படுத்த 117 மாவட்டங்கள் விரும்புவதாக தெரிவித்த அவர், திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் 70 புதிய மாதிரிக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள 29 கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமபுற பள்ளிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவும், SC/ST மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பள்ளிகளிலும் மின்சார வசதி அவசியம் இருத்தல் வேண்டும் என்பதில் மாநில அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இத்தகு செயல்பாடுகளுக்காக சம்கார சிக்ஷா திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்கைகளின் படி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும், அதன்படி மாநில அரசு பின்பற்றுதல் வேண்டும் என்றுமாய் அவர் மாநில அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்

பள்ளிகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 57 ஆயிரத்து 583 பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகின்றன. பெற்றோர் தலைவராகவும், தலைமைஆசிரியர்கள் செயலர்களாகவும் செயல்படுகின்றனர். பள்ளி வளர்ச்சியை மேம்படுத்துதல், மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். அவை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. 

2018--19 கல்வியாண்டு முதல் இதற்கான கட்டணம் மற்றும் இதழ் சந்தா, தொடக்கப் பள்ளிக்கு 160 ல் இருந்து 210 ஆகவும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.210 ல் இருந்து 285, உயர்நிலைப் பள்ளிக்கு 460 ல் இருந்து 860, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.660 ல் இருந்து 1,260ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 57 ஆயிரத்து 583 பள்ளிகளிடம் இருந்து 2.36 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது

செவ்வாய், 17 ஜூலை, 2018

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பல்வேறு அலுவலகங்கள், தாமாக முன்வந்து, அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப் படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,707 இடங்கள் உள்ளன

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை, நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறையை, எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசின் சார்பில், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைக்கப்படும். இவற்றில் பயிற்சி வழங்க, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, விரைவில் துவக்கி வைப்பார்.

புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை

புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பல புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய பாடத்திட்டத்தில் உள்ள, 'பார்கோடு, க்யூ.ஆர்.கோடு, வீடியோ' உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, நவீன முறையில் பாடம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்