தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி, மாணவ - மாணவியர் இடையே வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஜூலை, 15 முதல், ஆகஸ்ட், 14 வரை, ஒரு மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படும்.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
ஞாயிறு, 15 ஜூலை, 2018
தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்'
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில், இரண்டு மாதங்களில், இலவச இணைய தள, 'வைபை'
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில், இரண்டு மாதங்களில், இலவச இணைய தள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில், கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசு ஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு 10000 அபராதம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000, 5,000, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கும் நடைமுறை, இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வரும், 31ம் தேதிக்குள், கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறை, கண்டிப்பான ஆணை பிறப்பித்துள்ளது. அதன்பின், தாக்கல் செய்யப்படும் வரி கணக்குகளுக்கு, அபராதம் உண்டு என்றும், இந்த மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை, 2019 மார்ச், 31க்கு பின், தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
வியாழன், 12 ஜூலை, 2018
இஞ்சினியரிங் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்16ம் தேதியும், விளையாட்டு பிரிவினருக்கு, 17ம் தேதியும் நடத்தப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இன்ஜினியரிங் சேர்க்கை ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், சிறப்பு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, இம்மாதம், 6, 7 மற்றும், 8ம் தேதிகளில் நடந்தது.இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, வரும், 16ம் தேதியும், விளையாட்டு பிரிவினருக்கு, 17ம் தேதியும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ளார்
எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ள பாடத்திட்டம்' ப
''மத்திய அரசின், எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் அமையவிருக்கிறது,'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், கோபியில், 2,500 மாணவர்களுக்கு, தணிக்கையாளர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜி.எஸ்.டி., புதிய வரி திட்டத்தின் மூலம், தமிழகத்தில், தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். அடுத்தாண்டு முதல், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. அலைபேசி, ஸ்மார்ட் கணினிகளிலும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய அரசின் எத்தகைய தேர்வுகளையும், மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினர்.
மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவிருந்தது. இந்நிலையில் தமிழில் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை 2ம்கட்ட மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
படிக்கும்போதே தொழில்திறனை தெரிந்து கொள்வது அவசியம்'-இறையன்பு ஐ.ஏ.எஸ்
பத்து மாணவர்கள் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம்,'' என, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், இறையன்பு தெரிவித்தார்.
அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கான, ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம், சென்னை, நந்தனம் அரசுக்கல்லுாரியில் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, இறையன்பு பேசியதாவது: தொழில்முனைவு என்பது ஒரு பண்பின் உணர்வு. இந்த பண்பு, அரசு, தனியார் மற்றும் சேவை துறைகளில் இருக்க வேண்டும். தொழில்முனை பண்பு இல்லையென்றால், எந்த செயலையும் சிறப்பாக செய்ய முடியாது. எனவே, தமிழகத்தில் உள்ள, 88 அரசு கலைக்கல்லுாரிகளில், ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளோம்.இதனால், மாணவர்கள் உடனடியாக தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றில்லை.தொழில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, அதற்கான வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள், வேலைவாய்ப்பை மட்டுமே குறி வைத்து, வாழ்க்கையை துவங்கக் கூடாது. தொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது என்பதை உணர்த்துவதே, எங்கள் நோக்கம்.தங்கள் சொந்த அனுபவங்களை, யோசனைகளாக மாற்றி, புதிய தொழில்முனைவோராக மாறலாம். இதுவரை, 1.90 லட்சம் பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பத்து பேர் தொழில் முனைவோரானால், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம். இது போன்ற பயிற்சி மற்றும் முகாம்கள் வழியாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைச் செயலர், தர்மேந்திரபிரதாப் யாதவ், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர், சஜீவனா உட்பட, 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு GRADE I(b) HRA
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு GRADE I(b) HRA
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு செ.முத்துசாமி ஐயா அவர்களின் முயற்சியின் விளைவாக
வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு அரசாணை எண் 305 ன் படியே அக்டோபர் 2017 முதல் ஜூன் 2018 வரை GRADE I(b) வீட்டு வாடகைப்படி நிலுவையோடு அனுமதித்திட மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் இராசிபுரம் சார்நிலை கருவூல அலுவலரும் உறுதியளித்துள்ளார்கள்.
மேலும் கோரிக்கையின்படி மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரின் பரிந்துரையின் பேரில் சேலம் ஆட்சியரும் இராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கும் GRADE-I(b) HRA & CCA வழங்கும் உத்தரவினை, சேலம் மாவட்ட அரசிதழில் வெளியிடுவதற்கான ஆணை பிறப்பித்துள்ளார் என்பதனையும், அவற்றினை எதிர்வரும் அரசிதழில் வெளியிட உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியினையும் நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் திரு. ரஹோத்மன் உறுதிபட நமது மாநில தலைவரிடம் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டு வாடகை படி பிரச்சனையை கொண்டு சென்ற உடனே அவற்றிற்கு தீர்வு கண்ட மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் மதிப்புமிகு தென்காசி திரு.ஜவஹர் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் மற்றும் "எமக்குத் தொழில் ஆசிரியர்க்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மரியாதைக்குரிய திருசெ.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றியை, வெண்ணந்தூர் வட்டாரக் கிளை சார்பில் தெரிவித்தனர்.
ஞாயிறு, 8 ஜூலை, 2018
கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி
ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.
முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை; விடை திருத்தத்திலும் முறைகேடு நடக்கிறது என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த, 2012ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் மற்றும் செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் ஆகியோர் பதவி வகித்த போது, தேர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர்.ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகமானது. மாவட்ட அளவில், தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப் பட்டனர்.
கணினி வழியில் திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாள்களை பயன்படுத்தி தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல், 'ஆன்லைன்' மற்றும் கணினி வழி தேர்வும் அறிமுகமானது.சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், 150 கணினிகள் அடங்கிய, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், மின் வெட்டு, ஆன்லைன் இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், மாவட்ட வாரியாக, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்க முடியாதது போன்ற பிரச்னைகளால், ஆன்லைன் தேர்வை தொடர முடியவில்லை.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மீண்டும், ஆன்லைன் தேர்வு அல்லது, கணினி வழியாக, 'ஆப் லைன்' தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, தற்போதுள்ள கணினிகளை மாற்றி, புதிய தொழில்நுட்ப வசதியுள்ள கணினிகள், விடை திருத்த சாப்ட்வேர் போன்றவற்றை வாங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கணினி வழி தேர்வுக்கு, கணினிகள் வினியோகம் செய்யும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,யின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட, தனியார் நிறுவனம் முன்வந்தால், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்கும் தேர்வுகளை, சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எந்தெந்த பதவிகளுக்கு கணினி வழியாக தேர்வு
குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 3 ஏ, குரூப் - 4, வி.ஏ.ஓ., தேர்வு போன்ற தேர்வுகளில், பல லட்சம் பேர் பங்கேற்பர். அவற்றுக்கு, ஆன்லைன் அல்லது கணினி வழி தேர்வு நடத்த போதிய வசதிகள் இல்லை.எனவே, தடய அறிவியல், புவியியல், புள்ளியியல், சட்டக்கல்வி, நகர்ப்புற வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் போன்ற, 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் பங்கேற்கும் தேர்வுகளை, கணினி வாயிலாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என, தெரிகிற
கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி
ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.
முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை; விடை திருத்தத்திலும் முறைகேடு நடக்கிறது என்ற, குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த, 2012ல், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் மற்றும் செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் ஆகியோர் பதவி வகித்த போது, தேர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர்.ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகமானது. மாவட்ட அளவில், தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப் பட்டனர்.
கணினி வழியில் திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாள்களை பயன்படுத்தி தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல், 'ஆன்லைன்' மற்றும் கணினி வழி தேர்வும் அறிமுகமானது.சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், 150 கணினிகள் அடங்கிய, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், மின் வெட்டு, ஆன்லைன் இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், மாவட்ட வாரியாக, ஆன்லைன் தேர்வு மையம் அமைக்க முடியாதது போன்ற பிரச்னைகளால், ஆன்லைன் தேர்வை தொடர முடியவில்லை.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மீண்டும், ஆன்லைன் தேர்வு அல்லது, கணினி வழியாக, 'ஆப் லைன்' தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, தற்போதுள்ள கணினிகளை மாற்றி, புதிய தொழில்நுட்ப வசதியுள்ள கணினிகள், விடை திருத்த சாப்ட்வேர் போன்றவற்றை வாங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக, கணினி வழி தேர்வுக்கு, கணினிகள் வினியோகம் செய்யும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,யின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட, தனியார் நிறுவனம் முன்வந்தால், முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்கும் தேர்வுகளை, சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எந்தெந்த பதவிகளுக்கு கணினி வழியாக தேர்வு
குரூப் - 1, குரூப் - 2, குரூப் - 3 ஏ, குரூப் - 4, வி.ஏ.ஓ., தேர்வு போன்ற தேர்வுகளில், பல லட்சம் பேர் பங்கேற்பர். அவற்றுக்கு, ஆன்லைன் அல்லது கணினி வழி தேர்வு நடத்த போதிய வசதிகள் இல்லை.எனவே, தடய அறிவியல், புவியியல், புள்ளியியல், சட்டக்கல்வி, நகர்ப்புற வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் போன்ற, 50 ஆயிரத்துக்கும் குறைவானோர் பங்கேற்கும் தேர்வுகளை, கணினி வாயிலாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என, தெரிகிற
பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள உயர்வு
பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளமாக, 1.82 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல்கலை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உதவி பேராசிரியர்கள், குறைந்த பட்சம், 57 ஆயிரத்து, 700 ரூபாயும், பேராசிரியர்கள், அதிகபட்சமாக, 1.82 லட்சம் ரூபாயும் சம்பளம் பெற உள்ளனர். இந்த சம்பள உயர்வு, 2017 அக்., 1 முதல் அமலுக்கு வரும். -இதற்கான அரசாணை, தமிழக உயர்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வந்தனர். சமீபத்தில் கல்வித்துறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம்.
இதனால் 'இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சில இடங்களில் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்க முடியும். மேலும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலுள்ள வட்டார கல்வி அலுவலர்களை கண்காணிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள எங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பது நியாயமற்றது, என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வித்துறை பணியாளர்களின் பணி விதிகள் திருத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் குழப்பம் தீர்ந்துவிடும்,' என்றார்.
மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் வரை கால அவகாசம்
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
வியாழன், 14 ஜூன், 2018
உலக ரத்த தான தினம்
✍✨ *Gurushisyan R.Murugan* ✨✍
ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 14ல், *உலக ரத்த தான தினம்*.கடைபிடிக்கப்படுகிறது. *யாரோ ஒருவருக்காக உதவுங்கள்; ரத்தம் தானம் செய்யுங்கள்; வாழ்க்கையை பகிருங்கள்* என்பது இந்தாண்டு மையக்கருத்து.
எதிர்பாராத விபத்து, மகப்பேறு, ஆப்பரேஷன், நோய் போன்ற ஆபத்தான சூழல்களில் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே, ரத்தம் பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.
நல்ல உடல்நிலையில் உள்ள 18- 60 வயதுக்குள் உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்த தானம் செய்ய வேண்டும்.
பயம் மற்றும் நோய் உருவாகும் என்ற தவறான எண்ணமே இந்தியாவில் மக்கள் ரத்த தானம் செய்ய தயங்குவதற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வதன் மூலம் எச்.ஐ.வி., உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என தவறாக நினைப்பதால், தானம் செய்ய தயங்குகின்றனர். தானம் செய்த ரத்தம், இரண்டே மாதங்களில் 100 சதவீதம் மீண்டும் உற்பத்தியாகி விடும். ரத்த தானம் செய்வது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும்.
உலகளவில் ஆண்டுக்கு 11.25 கோடி பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் பாதி, அதிக வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள்.
தானாக விரும்பி ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை, 2008ல் இருந்து 2013ல், ஒரு கோடி அதிகரித்துள்ளது
ஆயிரம் பேரில், அதிக வருமானம் உடைய நாடுகளில் 32 பேர் ரத்ததானம் செய்கின்றனர். நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் 15, ஏழை நாடுகளில் 5 ஆக உள்ளது.
தானாக முன்வந்து இலவசமாக வழங்குதல், உறவினர்களுக்காக வழங்குதல், பணத்துக்காக வழங்குதல் என 3 வழிகளில் ரத்ததானம் வழங்கப்படுகிறது.
57 நாடுகள் 100 சதவீதமும் இலவச ரத்ததானம் மூலம் சேகரிக்கிறது. 74 நாடுகள் 90 சதவீதம் இலவச ரத்ததானத்தை சேகரிக்கிறது.
உலகின் 176 நாடுகளில் 13,000 ரத்த மையங்கள் மூலம் 11 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.
வரும் 2020க்குள் அனைத்து நாடுகளும், தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்கள் மூலமே 100 சதவீதம் ரத்தத்தை பெற வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரத்ததானம் செய்பவர்களில், 30 சதவீதம் பேர் பெண்கள்.
வியாழன், 31 மே, 2018
கோடை விடுமுறைக்குப்பின் நாளை பள்ளிகள் திறப்பு
*கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.*
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் *ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.* கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேவேளையில் பள்ளிகள் *வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.*
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.