வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்., 1 முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும்
தமிழக அரசின் உதவித்தொகை பெற விரும்பும், ஆதிதிராவிடர் எழுத்தாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.