GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

 இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

இது குறித்துஇப்பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் கூறியதாவது  இக்னோவில், 28 லட்சம் மாணவர்கள் தொலைதுாரக் கல்வி பயில்கின்றனர். முதன்முறையாகஇந்தாண்டுமாணவர் சேர்க்கை,ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்துமாணவர்களுக்கான தேர்வையும்ஆன்லைன் மூலம் நடத்த பரிசீலித்து வருகிறோம். மத்திய மனித வள அமைச்சகம்,பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்ததும்,ஆன்லைன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச திறந்தவெளி பல்கலைக் கழகங்களில்மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்அவைஆன்லைன் தேர்வுகளை சுலபமாக நடத்துகின்றன. ஆனால்,இக்னோ.,வில் மாணவர்கள் அதிகம்அதில்ஏழைகள்பெண்கள்பணியாற்று வோர்இல்லத்தரசிகள் எனபலதரப்பினர் உள்ளனர். அவர்களுக்குஆன்லைன் தேர்வு சுலபமாக இருக்குமா என்றும்,பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இக்னோ 228 வகையானஇளங்கலைமுதுகலைபட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.