GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பள்ளி கல்லூரிகளில் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம்

 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்கலைகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கரின்125வது பிறந்த தினத்தை முன்னிட்டுகல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படிபல்கலைகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு நடத்த வேண்டும்னியார் பல்கலைகள் எஸ்.சி.,எஸ்.டி.பிரிவு மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும் எனயு.ஜி.சி.,அறிவுறுத்தியுள்ளது.
மேலும்இன்றைய குடிமக்கள் இடையேகுறிப்பாக மாணவர்கள் இடையே அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஆண்டு தோறும் நவ.26ம் தேதி அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்அன்றைய தினம்பள்ளிகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு குறித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டும் எனயு.ஜி.சி.தெரிவித்துள்ளது.
இதுகுறித்த நடவடிக்கைகளை, ambedkar.ugc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்குஅக்.15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனஅனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி.செயலர் ஜஸ்பல் சந்து கடிதம் அனுப்பியுள்ளார்.