GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

எம்.பி.பி.எஸ்: செப்.,21ல் பொதுப் பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு

பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகின்றது.
தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டிற்கான 2,167 இடங்கள், இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் நிரம்பின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் திரும்ப கிடைத்ததும், இம்மாத இறுதியில், இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. சில மாணவர்கள் பொதுப் பிரிவில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். இதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 21-ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.
மேலும், விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த பிரிவில், 27 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.