GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 12 செப்டம்பர், 2015

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி மூலம் இணையதள வசதி

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலமாக இணையதள வசதி செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம், அலுவலகங்களில் இணையதள வசதிகளை செயல்படுத்தத் தேவையான தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டுமென்று அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.