GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 17 செப்டம்பர், 2015

பி.எட்., தரவரிசை பட்டியல்; நாளை மறுநாள் வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்பி.எட்.,படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில்ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில்பி.எட்.மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்வரும் 28ம் தேதி நடக்கிறது. அரசு சார்பில்லேடி வெலிங்டன் கல்லுாரிமாணவர் சேர்க்கையை நடத்துகிறது. மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
 
விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிநேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப,வெயிட்டேஜ் முறையில்தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் எனஉயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.