GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 3 மே, 2025

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை 4.5.2025 நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம் பி பி எஸ், பி டி எஸ், சித்தா, யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் NEET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025- 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான NEET நுழைவுத் தேர்வு நாளை 4.5.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மின்னணு சாதனம் உள்ளிட்ட எவற்றையும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி தங்களை தயார் செய்து கொண்டு தேர்வுக்கு செல்ல வேண்டும் 
பிற்பகல்இரண்டு மணிக்கு நடைபெறும் தொடங்கும் தேர்வுக்கு சரியாக 1:30 மணிக்கு மேல் வருபவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆகவே முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் மேலும் தகவல்களுக்கு
NEET WEBSITE ADDRESS    https://neet.nta.nic.in/
 என்ற இணையதளத்தில் இருந்து கொள்ளலாம்