ஞாயிறு, 29 ஜூன், 2025

MBBS BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே க நகர் ESI மருத்துவக் கல்லூரியில் 5200 எம் பி பி எஸ் இடங்கள் உள்ளன அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் mbbs படிப்புகளுக்கு உள்ளன மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன பிடிஎஸ் படிப்பை பொருத்தவரையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன இந்த சூழலில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது