ஞாயிறு, 29 ஜூன், 2025

மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க பள்ளிகளில் ' வாட்டர் பெல் ' திட்ட அறிமுகம்

நீர்ச்சத்து குறைபாடு மாணவர்களின் அறிவாற்றல் கவனம் கல்வி செயல்பாடுகளை கணிசமாக பாதிக்கிறது பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் போது அதன் பலன் அதிகமாக காணப்படும் எனவே மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக வாட்டர் பில் என்னும் செயல் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்  
இதன்படி காலை 11 மணிக்கு மதியம் ஒரு மணிக்கு மாலை 3 மணிக்கு வாட்டர் பில் அடிக்கலாம் வழக்கமான மணியிலிருந்து தண்ணீர் மணிக்கு வேறு மணியை பயன்படுத்த வேண்டும் தண்ணீர் குடிக்க மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது வகுப்பறையில் தண்ணீர் குடிக்க இரண்டு முதல் மூன்று நிமிடம் நேரம் வழங்க வேண்டும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் நாளை திங்கள்  முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது