https://www.tneaonline.org or https://dte.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் TNEA FACILITATION CENTRES அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
விண்ணப்ப பதிவு கட்டணம்
OC /BC/ BCM/ MBC& DNC : ரூ 500 SC/SCA/ST:ரூபாய் 250
பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் credit card /debit card/ net banking/ upi இணையதளம் வாயிலாக பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் THE SECRETARY TNEA payable at Chennai, 07.05. 2025 அன்றிலிருந்து பெற்ற வரையோலையை (demand draft) பதிவு கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம்(FTC) வாயிலாக மற்றும் சமர்ப்பிக்கலாம். கலந்தாய்வு விவரங்கள் வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்காணும் இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக
விண்ணப்பம் பதிவு செய்ய ஆரம்பம் நாள் 7.5.2025
இறுதி நாள் 6.6.2025
மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய
விண்ணப்பத்தினை பதிவு செய்யும்பொழுது அசல் சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை ( FTC)தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்டு அனுப்பப்படும்.தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரி செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும் .அனைத்து வகையான கலந்தாய்வுகளும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்
பகுதி நேர பட்டப்படிப்புகள் சேர்க்கை அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்