வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும்

தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.
இக் கழகத்தின் மாவட்டப் பொதுக்குழு   நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.  இதில், இக் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

நாமக்கல் மகளிர், திருச்செங்கோடு ஆண்கள், மகளிர், குமாரபாளையம் ஆண்கள், மகளிர், வெண்ணந்தூர் ஆண்கள், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.