புதன், 30 செப்டம்பர், 2015

சென்னை பல்கலையில், வேலைவாய்ப்பு முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது.

 சென்னை பல்கலையில்வேலைவாய்ப்பு முகாம்அக்., 3ம் தேதி நடக்கிறது. 
இதுகுறித்துபல்கலை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த, 2013 முதல், 2015க்குள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கானவேலைவாய்ப்பு முகாம்வரும், 3ம் தேதி பல்கலை வளாகத்தில் நடக்கிறது. டெக்ரூட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்துபல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள, 1,200 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முகாம் நடக்கும் இடத்தில்பெயர்முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9551690630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.