புதன், 23 செப்டம்பர், 2015

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது

 மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது

எட்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசு ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக நான்கு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அரசு வழங்கும். இத் தேர்வில் கிராம பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க தகுதி உடையவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன் ஊரக திறனாய்வு தேர்விற்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் செப்., 27ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.