Website for Enhancing Educational,Social and cultural development
புதன், 28 மே, 2025
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு
2025- 2026 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிவித்தது தனி நபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், கணக்கு தணிக்கை செய்ய தேவையில்லாத நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மேற்கண்ட கால நீட்டிப்பு பொருந்தும்