டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் ஜூலை 2016பருவத்தில் சேர்வதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில், வரும் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னையில், இதற்கான எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் நடக்கவுள்ளது.
எழுத்து தேர்வில் ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் உள்ளது. கணக்கு, பொது அறிவியல் ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். நேர்முக தேர்வில், விண்ணப்பதாரர் அறிவுக்கூர்மை, தனித்தன்மை ஆகியவற்றை ஆராயும் வகையில் அமையும்.
எழுத்து தேர்வில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு, நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முக தேர்வு உட்பட குறைந்த பட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும். இந்த தேர்விற்கான விண்ணப்பம் தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூன், உத்தரகான்ட் மாநிலம், என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூன் பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை டெல் பவன் டேராடூன் வழங்க கூடிய பொதுபிரிவினர் 430 ரூபாயிற்கான (பதிவஞ்சல்) அல்லது 480 ரூபாயிற்கான விரைவு அஞ்சல் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் சாதி சான்றோடு 385 ரூபாய் பதிவு அல்லது 435 ரூபாய் விரைவு அஞ்சல் கேட்பு காசோலை செலுத்தியோ அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி இணையதளத்திலிருந்து செலுத்து சீட்டை (சலான்) பதிவிறக்கம் செய்து மேற்கண்ட தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் (சிறார்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் வரும் 2016ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதினொன்னரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் போது அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில்7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். இவ்வாறு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.