எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், சனிக்கிழமை (செப்.19) முதல் ஆன்லைன் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தது: எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இத்தேர்வு எழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில். அரசுத் தேர்வு சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் உள்பட அனைவரும் சனிக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டினை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.