வியாழன், 17 செப்டம்பர், 2015

பொறியியல் படிப்பில் காலியிடம் நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்த கோரிக்கை

அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனமாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டில் பி.டெக்.,பாடப்பிரிவில் 1400க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாகஅரசு பொறியியல் கல்லுாரிகாரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லுாரியில் 60 இடங்கள் காலியாக உள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள்அரசு பொறியியல் கல்லுாரியில் சேரசிறப்பு கவுன்சிலிங்கை எதிர்பார்த்துள்ளனர்.
எனவேகாலியிடங்களை நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும். இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சென்டாக் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களின் முழு விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.