செவ்வாய், 11 ஜூன், 2024

ஜூன் 12-குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
நாளை காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஞாயிறு, 9 ஜூன், 2024

என்ஜினியரிங் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு 

 இதுவரை இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் (Diploma in co operative) சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மட்டுமே வரவேற்கப்படுகின்றன

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டும் வரவேற்கப்படுகின்றன 

பயிற்சி காலம்: ஒரு வருடம் 

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பில் தேர்ச்சி
 அல்லது பத்தாம் வகுப்பு +பட்டைய படிப்பு தேர்ச்சி +பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

 01.08.2024 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் 

பயிற்சிக்கான தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் 

பயிற்சிக்கு அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும் 

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்



பயிற்சிக்கு 10. 6 .2024 அன்று முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

 இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும் 

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 100
 ஒன்றுக்கு மேற்பட்ட மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் தனித்தனியே இணைய வழியில் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

 இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19 .7 .2024 பிற்பகல் 5 மணி வரை மட்டுமே அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது 

பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள் வழிகாட்டு நெறிமுறைகள் அவற்றை ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்

 இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்

 இணைய வழியாக அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்தால் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது 

பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயிற்சியில் சேர்வதற்கு தகுதி பெற்றவர்கள் விவரம் பயிற்சி நிலையங்கள் மூலம் தெரிவிக்கப்படும்

 பயிற்சியில் சேர்வதற்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ள வேண்டும் 

தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்  பயிற்சிக்கான கட்டணம் 18,750 முழுவதும் ஒரே தவணையில் இணைய வழி மூலமே செலுத்த வேண்டும்













MBA மற்றும் MCA முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2024-2025மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024 2025

 தகுதி வாய்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைகள், வட்டார மையங்கள், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள்,சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தொழில்நுட்ப கல்வி இயக்கம் சென்னை மற்றும் கல்லூரி கல்வி இயக்கம் சென்னை கட்டுப்பாட்டில் இயங்கும் எம் பி ஏ , எம்.சி. ஏ முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

எம் பி ஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 இணையதளம் வாயிலாக தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் 

சனி, 8 ஜூன், 2024

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் தூத்துக்குடி பொதுமுறை மாலுமி பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் கீழே இயங்கும் ஒரு தன்னாட்சி குழு 

பொதுமுறை ஆளுமை பயிற்சி 1 7 2024 முதல் தொடங்கப்பட உள்ள ஆறு மாத கால பொதுமுறை மாலுமி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 


பொதுமுறை மாலுமி பயிற்சிக்கு விண்ணப்பிக்க இதை கிளிக் செய்யவும்

இன்ஜினியரிங் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகளில் பிஇ பி டெக் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் 2 லட்சத்துக்கு அதிகமான இடங்கள் உள்ளன .
இதில் பாலிடெக்னிக் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிப்பில் சேரலாம் இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 8.6.2024 தொடங்குகிறது. மாணவர்கள் கீழ்கண்ட

நேரடியாக B.E. இரண்டாம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க இந்த இணையதளத்தை கிளிக் செய்யவும் 


இணையதளத்தின் வாயிலாக நேரடியாக இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு 7.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி, 7 ஜூன், 2024

பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

*12வது உயிரியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வாய்ப்பு.*  


 சேலத்தில் உள்ள *மணிமா மருத்துவமனை* 
நாங்கள் 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகிறோம்:

  *தகுதி* : 
 → 12 ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவு 
 → 2024ஆம் ஆண்டு 12வது பொதுத் தேர்வுகளில் 580 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் 
 → நிதி நிலையின் அடிப்படையில்

 விண்ணப்பிக்க:

  *எங்களை அழைக்கவும்: 8610953534*

சனி, 1 ஜூன், 2024

2024-2025 ஆண்டுக்கானகால்நடை மருத்துவர் பட்டப் படிப்புக்கு எவ்வாறு? எப்போது விண்ணப்பிக்கலாம் ?

தமிழ்நாட்டில் நாமக்கல் திருநெல்வேலி ஒரத்தநாடு சேலம் உள்பட ஏழு இடங்களில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன 
இதில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

அதேபோல சென்னை உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியும் ஓசூர் கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரிகளில் உணவு பால்வளம், கோழி இன தொழில் நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன 

இந்தப் படிப்புகளுக்கான 
மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு ஜூன் மாதம் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஜூன் மாதம் 21ஆம் தேதி நிறைவு பெறுகிறது

கால்நடை மருத்துவராக விருப்பமுள்ள மாணவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 

கால்நடை மருத்துவர் படிப்புக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

BVSC ADMISSION CLICK HERE



கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் மாதமும் கலந்தாய்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது மேலும் அக்டோபர் மாதம் கல்லூரி திறக்கப்படும் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன