சனி, 26 டிசம்பர், 2020

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான வருவாய்வழி மற்றும் தேசிய திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு  

விண்ணப்பம் 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்யலாம் 

தேர்வு தேதி :21.02.2021

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : www.dge.tn.gov.in





ஞாயிறு, 6 டிசம்பர், 2020

ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு அறிவிப்பு

குருசிஷ்யன் கல்வியின் அன்புவாழ்த்துகள் ...


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தாண்டுக்கான, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை, மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதில், நாடு முழுதும் இருந்து, 47 பேர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில், விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப்; சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகியோர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி, காட்டேரிக்குப்பம், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வமுத்து குமரன் ராஜ்குமாரும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 
 

புதன், 10 ஜூன், 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னையைச் சேர்ந்த மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஆன் லைன் வகுப்புகளால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும் என்றும், ஏழை மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், தற்போதுள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.
அதேசமயம் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  இது தொடர்பாக இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

திங்கள், 8 ஜூன், 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11க்கு ஒத்திவைப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11க்கு ஒத்திவைப்பு; அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

வியாழன், 4 ஜூன், 2020

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று 4.6.2020 முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்


10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 12 மே, 2020

உலக செவிலியர் தின வாழ்த்துகள் 

12.05.2020
அனைத்து செவிலியர்களுக்கும்  வாழ்த்துகள்